English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quatrefoil
n. நாலிதழ் மலர், நான்கிலைத் துவ்ர்,(கட்.) நாற்கதுப்பணி.
Quattrocento
n. இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி.
Quaver
n. அதிர்வு, நடுக்கம், பாட்டில் குரல்நாள அதிர்வு, பேச்சில் குஜ்ல் நடுக்கம், (வினை) அதிர்வுறு, நடுங்கு, பாடுதலில் அதிர்விசை பயன்படுத்து, அதிர்விசையுடன் பாடு, நரங்கிசைச் சுரங்களுடன் பாடு.
Quay
n. ஓடத்துறை, கப்பல்துறை.
Quean
n. (செய்.) சிறுக்கி,பட்டி.
Queasy
a. உணவு வகையில் குமட்டுகிற, வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த, ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற, செரிமானக் கோளாறுடைய, செரிமான மந்தம் வாய்ந்த, தொட்டால் துடிக்கிற, கழி பெரும் நுண்மையான.
Quebracho
n. திண்ணிய கட்டையையும் மருந்துப்பட்டையையும் த அமெரிக்க மரவகை, மருந்துப்பட்டை வகை.
Queel
v. (செய்.) அடக்கு, கீழ்ப்படுத்து, வலுக்கட்டாயமாகப் பணியச்செய், வென்றடக்கு, அறக்கி ஒழித்துக்கட்டு.
Queen
n. அரசி, ஆட்சியுரிமையுடைய அணங்கு, அரசன் மனைவி, பெண்ணரசி, காதலி, மனைவி, வீறமைதிமிக்க மாதரசி, அழகி, விழாவரசி,விளையாட்டரசி,தேவி,பெண் தெய்வம்,இனத்திற்சிறந்த அழகுப்பொருள்,மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண், சதுரங்கத்தின் காயரசி,சீட்டாட்டத்தில் சீட்டரசி, பெண் தேனீ, பெண் குளவி, பெண் எறும்பு, அன்பாட்சிக்குரியவர்,அன்பாட்சிக்குரிய நாடு, அன்பாட்சிக்குரியது, அழகாட்சிக்குரியது, சிறப்புக்குரியது, மேம்பட்டது,(வினை) அரசியாக்கு, அரசியாக இயங்கு, மேலாட்சி செய், சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று, சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Queen-cake
n. பழங்கள் உள்ளிட்ட இதயவடிவான அப்பம்.
Queen-like
a. அரசி போன்ற, பெருமித அழகு வாய்ந்த.
Queenly
a. அரசிக்குரிய,அரசிக்கேற்ற, அரசிபோன்ற, வீறார்ந்த.
Queen-posts
n.pl. மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள்,
Queens weather
n. செங்கதிரொளி.
Queensberry rules
n.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
Queen-stitch
n. பூ வேலையில் அழகுத் தையல்வகை.
Queens-ware
n. பால்வண்ண மட்பாண்டவகை.
Queer
a. தனி மாதிரியான, விந்தையான, தனிப்போக்குள்ள, ஐயுறத்தக்க, தலைசுற்றுகிற.
Quench
v. தணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய்.