English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Incorporation
n. குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு, அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு.
Incorporator
n. கூட்டுக்குழு அமைப்பாளர், சங்கமாக இணைத்து அமைப்பவர், மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர், கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர்.
Incorporeal
a. உடல் சார்பில்லாத, நுண்ணியலான, பருப்பொரள் சாராத, (சட்) நடைமுறையில் மெய்யாயிராத.
Incorrect
a. தவறான, சரியல்லாத, செய்திவகையில் உண்மைக்கு மாறான, எழுத்தாண்மை வகையில் குற்றமுள்ள, குறைகளையுடைய, நடைவகையில் ஒழுங்குமீறிய, அச்சுப்படிவ வகையில் சரியானபடி திருத்தப்பெறாத, பிழைபட்ட.
Incorrigible
a. திருத்த முடியாத, சீர்ப்படுத்த முடியாதபடி கேடான, இழிவான, சீர்கேடான.
Incorruptible
a. சிதைந்து கெடாத, அழிவுக்காளாகாத, ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத, கைக்கூலி வாங்காத, இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Incrassate
a. (தாவ., வில) தடித்த, தடிப்புற்ற, வீங்கிய.
Increase
-1 n. மிகுதிப்பாடு, பெருக்கம், வளர்ச்சி, எண்ணிக்கையில் மிகுதி, இனப்பெருக்கம், மிகுதிப்பட்ட தொகை, மகைப்பட்ட எண், கூடுதலான பணத்தொகை.
Increase
-2 v. மிகுதியாகு, பெருகு, எண்ணிக்கையில் வளர், பல்கிப் பெருகு, பலவாகு, பண்பு திறன் முதலியவற்றின் வகையில் முன்னேறு, மிகுதியாக்கு, இனப்பெருக்வகமுறு, பெற்றுப் பெருகு, பெருக்கு, குணத்தை முனைப்பாக்கு, பண்பைச் செறிவார்ந்ததாக்கு.
Incredible
a. நம்புதற்கரிய, உண்மையென நம்ப முடியாத,. நம்புதற்கியலாத நிலையில் விசித்திரமான, வியக்கத்தக்க.
Incredulous
a. எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த,
Increment
n. எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த.
Incriminate
v. குற்றஞ்சாட்டு, குற்றச்சாட்டில் சிக்கவை.
Incriptive
a. கடன்வகையில் பங்கு வடிவில் வௌதயிடப்பட்ட, பொறிப்பு மூலம் சார்ந்த.
Incrustation,n.
மேலேடு படிவு, மேலேடு, புறஓடு, பொருக்கு, தோடு, திண்பூச்சு, கட்டட ஓரச்சலவைக் கற்கட்டு, பழக்க வழக்க உறைபடிவு.
Incubate
v. அடைகாக்கும்படி முட்டை மேலமர், குஞ்சு பொரி, நினைவில் ஆழ்ந்திரு, நினைந்து நினைந்து உருகு.
Incubation
n. அடைகாத்தல், அடைகாப்பு, குஞ்சுபொரிப்பு, அடைகாப்பு முறை, வேண்டுதல் நோன்புத்துயில், தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல், தன்னைமறந்த ஆழ்நினைவு, தற்சிந்தனை, தூய ஆவியின் தற்சிந்தனை நிலை, ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு, (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை, நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
Incubator
n. அடைகாப்புக்கருவி, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி, கருமுதிர்ச்சிக்கருவி, முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு, (மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு.
Incubus
n. பேய்க்கனா, தீக்கனவு, கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி, அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர், அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள், கிலியூட்டும் செய்தி.
Inculcate
v. மனத்தில் ஆழப்பதியவை, வற்புறுத்திப் பயிற்று, மீண்டும் மீண்டும் முயன்று படியவை, பயிற்றுவித்துப் பழக்கு.