English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Incessant
a. இடைவிடாத, ஓயாத, தொடர்ச்சியான, திரும்பத்திரும்ப வருகிற.
Incest
n. முறைதகாப் புணர்ச்சி, தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையேயான கல்வி.
Incestuous
a. முறைதகாப்புணர்ச்சி சார்ந்த, கல்வி வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ள அணுக்க உறவினரிடைப்பட்ட.
Incfarnate
-1 a. மாறிப்பிறந்த.
Inch
-1 n. விரற்கடை, அங்குலம், அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி, சிறு அளவுக்கூறு, மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்
Inch
-2 n. சிறு தீவு, ஸ்காத்லாந்து நாட்டினையடுத்த சிறு தீவம்.
Inchoaste
a. துவங்கிய நிலையிலுள்ள, முதிராத, முற்றிலும் வளர்ச்சியுறாத, (வினை) துவங்கு, தொடக்கிவை, தோற்றுவி.
Incidence
n. வரி விழுப்பாடு, வரியின் வீழ்தகவு., பொருளின் சாய்தகவு, நிகழ்வின் கூடுநிலை, நேர், நிலை, பரப்பில் ஔதக்கதிர் சென்று தொடும் இடம், (கண) வீழ்தடம், தளத்திற் கோடு சென்று விழும்இடம்.
Incident
n. நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி, இடை நிகழ்ச்சி, சிறு செய்தி, கிளைக்கதை, சிறு பண்பு, நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி, (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி, பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன, (பெயரடை) நிகழக்கூடிய, சார்ந்ததுள்ள, இயல்பாகத் தொடர்பு கொண்ட, (சட்) உடனிணைந்த, தொடர்புள்ள, ஔதக்கதிர் விழுகின்ற, கோடு சென்று தொடுகின்ற, இயங்கு படை சென்று தாக்குகின்ற.
Incidental
a. தற்செயலாக நிகழ்கிற, நிகழக்கூடிய, முக்கியமல்லாத, சிறப்பித்துக்கூறுமுடியாத, சில்லறையான, இடை நிகழ்வான, வருநிகழ்வான.
Incinerate
v. சுட்டு நீறாக்கு, எரித்துச் சாம்பலாக்கு, எரித்து விடு.
Incinerator
n. எரி தொட்டி, நீற்றுலை.
Incipience, incipiency
n. தொடக்க நிலை, முதிரா நிலை.
Incipient
a. தொடக்க நிலையிலுள்ள, முதிராத, புனிற்றிளமையான.
Incipit
n. தோற்றுவாய், இங்கு தொடங்குகிறது.
Incise
v. வெட்டு, செதுக்கு,
Incisiform
a. உளிப்பல் போன்ற, முன்பல் ஒத்த வடிவுடைய.
Incision
n. வெட்டுதல், செதுக்குதல், அறுத்தல், வெட்டு, கீறல், வெட்டுப் பள்ளம், ஆழமான காயம்.
Incisive
a. வெட்டுகிற, துளைத்துச் செல்லுகிற், ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற, கடுந்தாக்குதலான, கடும் வசையான, அறிவுக் கூர்மையான.