English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inapt
a. தகுதியற்ற, திறமையற்ற, பொருந்தாத.
Inarch
v. கிளையைச் செடியினின்று வெட்டாமல் வளைத்துப் பதியம் போடு.
Inarm
v. (செய்) தழுவு, கட்டியணை.
Inarticulate
a. இணைப்பில்லாத, பூட்டுப்பொருத்தப்படாத, (பே-வ) தௌதவாய்ப் பேசும் ஆற்றலற்ற, நன்கு ஒலிக்க முடியாத,. ஊமையான.
Inartificial
a. கலைத்திறனற்ற, சுவைநயமற்ற, அழகற்ற, திறனற்ற, இயற்கையான, கவடற்ற, சூதற்ற.
Inartistic
a. கலைக்க்கொள்கையைப் பின்பற்றாத, கலைத்திறனற்ற.
Inasmuch
adv. என்ற காரணத்தினால்.
Inattention
n. கவனக்குறைவு, பராமுகம், அசட்டைப்படுத்துதல், பண்பிணக்கக்கேடு, நடைநயக்கேடு.
Inaudible
a. கேட்க முடியாத, செவிப்புலனாகாத,
Inaugural
n. தொடக்க விழாப் பேருரை, (பெயரடை) தொடக்கத்திற்குரிய, தொடக்க விழாவுக்குரிய.
Inaugurate v.
தொடங்கிவை, பணியமர்வுத் தொடக்கஞ் செய், விழாவினை முறையாற்றித் தொடங்கு, கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை, முதன் முதல் காட்சிப்படுத்து.
Inauspicious
a. தீயசகுனம் உடைய, நல்லெதிர்ப்பற்ற, மங்கலமற்ற, தீயதான.
Inboard
a. (கப்) கப்பலின் பக்கங்களிடையே, கப்பல் மையத்தில்.
Inborn
a. இயல்பாயமைந்துள்ள, உடன்பிறந்த, உள்ளிருந்து தோன்றிய.
Inbreathe
v. மூச்சு உள்வாங்கு பண்பை ஈர்த்து உட்கொள்.
Inbred
a. இயல்பான, உடன் பிறந்த, இயற்கையான உள்ளார்ந்த.
Inbreeding
n. உட்குழு மண உறவு முறை, இனத்தகப் பாலிணையளவு முறை.
Inca
n. தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர், பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
Incalculable
a. கணித்தற்குரிய, மிகப்பெரிய, முன்னரே மதிப்பிட்டறிய முடியாத, வரையறுத்துணர முடியாத, திடப உறுதியற்ற, நிலை உறுதியற்ற.
Incandesce
v. வெப்பத்தோடு ஔதவிடு, வெண்சுடர் ஔத வீசி எரியச்செய்.