English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Impregnate
a. சினைப்படுத்தப்பட்ட, கருவுறச் செய்யப்பட்ட, செறிவுற்று வளப்படுத்தப்பட்ட, (வினை.) சினைப்படுத்து, கருவுறச்செய், செறிவி, திண்ணிறை வாக்கு, ஏற்கக்கூடிய அளவுகல, (உயி.) கருப்பொலிவுறுத்து, பண்புதோய்வித்து வளப்படுத்து.
Impresario
n. பொதுக்கேளிக்கை விழாக்கள் ஏற்பாடு செய்பவர், இசைநாடக மேலாள், இசையரங்குச் செயலாளர்.
Imprescriptible
a. வரையறைகட்கு உட்படாத, சட்டப் படி அகற்ற முடியாத.
Impress
-1 n. பொறிப்பு, முத்திரை, பொறிப்புச் சின்னம், தனிச் சிறப்பான அடையாளம்.
Impress
-2 v. அழுத்து, பதியச் செய், குறியீடு, அடையாளம் செய், முத்திரையிடு, அச்சில் பதி, திறம்படக் கவர்ச்சி செய், ஆழ்ந்து பண்புருவாக்கு, மனத்திற் பதியவை.
Impress
-3 v. நிலப்படை கடறபடைத்துறைகளில் சேவை செய்யும்படி வற்புறுத்து, பொதுச் சேவைக்காகக் கைப்பற்று, விவாதத்தில் இணைத்துப் பயன்படுத்திக்கொள்.
Impression
n. பொறித்தல், பொறிப்பு, பொறித்த அடையாளம், முத்திரை, அச்சுப் பதிவு, படச்செதுக்குப்பாளப் பதிவு, பதிப்பு, ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி, மறுபதிப்பு, பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு, கருத்துப்பதிவு, கருத்துத்தடம், கருத்துவிளைவு, உணர்ச்சி விளைவு, எண்ணப்பதிவு, மனத்தில் ஏற்பட்ட கருத்து, தௌதவற்ற நம்பிக்கை, உறுதியற்ற கோட்பாடு.
Impressionable
a. எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற, எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய, ஏற்கும் இயல்புடைய.
Impressionism
n. பாவியல் கலைத்திறம், விரிநுணக்கக் கூறுகளில்லாமலே பொதுமைப்பாவமும் தொனியும் உண்டு பண்ணம் ஓவிய இலக்கியக் கலைகளின் பண்பு.
Impressive
a. ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டத்தக்க, மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளத்தக்க, மனத்தில் ஆழ்ந்து பதியத்தக்க.
Imprest
n. அக்கறைத்தொகை, அரசாங்க வேலைக்காக முன் பணமாகக் கொடுக்கப்பட்ட தொகை, அச்சாரம்.
Imprimis
adv. முதலாவதாக, முதலிடத்தில்.
Imprinatur
n. அச்சிடுவதற்குரிய அரசியல் இசைவுரிமை, இசைவாணை, செயலுரிமை இணக்கம்.
Imprint
-1 n. பெயர்விவரப் பொறிப்பு, அடையாள முத்திரை.
Imprint
-2 n. முத்திரையிடு, மனத்தில் ஆழ்ந்து படியச்செய், கருத்தில் பதியச்செய்.
Imprison
v. சிறைப்படுத்து, காவலில் அடை, கட்டுப்படுத்து, எல்லைக்குட்படுத்து, அடைத்துவை, மூடி வை.
Improbable
a. இயல்பாக நிகழக்கூடாத, நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத, பொருத்தமற்ற, நம்புதற்கரிய.
Improbity
n. நாணயமற்ற தன்மை, நேர்மையின்மை, வஞ்சகம், மோசம்.
Impromptu
n. முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு, உடனடி நகைச்சுவைத்துணுக்கு, முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை, உடனடி நடிப்புப்பகுதி, திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு, (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற, உடனடிச் செயலான, முன் முயற்சியற்ற, (வினையிடை.) முன்னேற்பாடின்றி, உடனடிச் செயலாக, முன்முயற்சியில்லாமல், தற்கணமாக.
Improper
a. நேரல்லாத, தகுதியற்ற, தவறான, ஒழுங்கில்லாத.