English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Important
a. முக்கியமான, முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் பயன் விளைவிக்கிற, பக்ட்டாரவாரமுள்ள, பகட்டான, பெருமையான.
Imports
n. pl. இறக்குமதிச் சரக்குகள்.
Importunate
a. விடாக்கண்டனான, ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற, விடாப்பிடியான, மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற, அவசரப்படுத்தி நெருக்குகிற.
Importune
v. இடைவிடாமல் இரந்துகேள், வற்புறுமத்திக் கெஞ்சிக் கேள், தொடர்ந்து மன்றாடு.
Importunity
n. விடாத்தொந்தரவு.
Impose
v. சட்டக்கோப்புச்செய், அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை, வரி சுமத்து, வலிந்து கடமை ஏற்கச்செய், பணிகளைச் செய்யும் படி ஏற்பி, பொறுப்புகளை ஒப்படை, போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய், ஏமாற்று, தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து, பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Imposition
n. சுமத்தீடு, விதிப்பு, வரி, தீர்வை, சுமை, ஏமாற்றுச் செயல், பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை, திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல்.
Impossible
a. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான.
Impost
-1 n. வரி, கடமை, திறை, கப்பம்.
Impost
-2 n. (க-க.) மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி.
Impostor
n. ஏமாற்றுகிறவர், வஞ்சகர், மோசக்காரர்.
Impostume
n. சீக்கட்டியபரு, கேடுவிளைவிக்கும் பகுதி.
Imposture
n. ஏமாற்று, மோசடி, வஞ்சகம்.
Impotent
a. செயலற்ற, வலுவற்ற, ஆற்றலற்ற, செயல் வகையற்ற, முதுமையுற்ற, தளர்ந்த, ஆண் தன்மையற்ற.
Impound
v. கால்நடைகளைப் பட்டியில் அடை, மூடிவை, சிறைப்படுத்திவை, சட்டப்படி உரிமையைத் தன்வயப்படுத்திக்கொள், சட்டப்படி உடைமைப் பொருளாகக் கொள், பறிமுதல் செய்.
Impoverish
v. வறுமையாக்கு, ஏழ்மையாக்கு, வலுக்குறையச் செய், வளங்குறை.
Impracticable
a. செயல்முறைக்கொவ்வாத, செயற்படுத்த இயலாத, வைத்துநடத்த இயலாத, சமாளிக்க முடியாத, செய்ய முடியாத, பயனற்ற, பாதைகள் வகையில் செல்வதற்கரிதான.
Imprecate
v. சாபமிடு, பழித்துரை, கண்டி.
Impregnable
a. கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள, தாக்குதலுக்கு அசையாத.