English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Echo
-2 n. கிரேக்க புராணக்கதையில் வரும் அரமகன், எதிரொலியின் உருவகம்.
Echogram
n. எதிரொலி மூலம் கப்பல் அடிக்குக் கீழுள்ள கடலாழத்தைக் கணித்துக் காட்டும் கருவிப்பதிவு.
Echoic
a. எதிரொலியின் இயல்புள்ள, (மொழி) ஒலிகளைப் போல் சொற்கள் அமைந்துள்ள, ஒலி அனுகரணம் சார்ந்த.
Echoism
n. ஒலிகளைப்போல் சொற்கள் அமையும் பண்பு, சொல்லொலியிசைவு.
Echoless
a. எதிரொலிக்காத, உணர்ந்து செயல் ஆற்றாத.
Echo-sounder
n. கப்பலடிக்குக் கீழ் உள்ள கடலாழத்தை எதிரொப் பண்புமூலம் கணித்துக்காட்டும் கருவி.
Eclair
n. குளிர் பாற்கட்டி நிரப்பிச் செய்யப்படும் சிறு விரல் வடிவப் பண்ணியம்.
Eclaircissement
n. (பிர.) தௌதவாக்கல், விளக்கங்கூறல்.
Eclampsia, eclampsy
(மரு.) சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய், பேறுகாலச்சன்னி.
Eclat
n. (பிர.) பகட்டான வெற்றி, மிகுசீர்த்தி, சமூகச் சிறப்பு, தனிமுனைப்பான இகழ்.
Eclectic
n. பன்னலத்திரட்டாளர், பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர், பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர், (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற, பன்னலக்கூட்டான, பல்திரட்டான, விரிந்த மனப்பாங்குடைய, குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Eclecticism
n. நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல், கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் கோட்பாடு, பல்வேறான நற்கூறுகளைத் தேர்ந்து திரட்டி உருவாக்கும் பாங்கு.
Eclectics
n. pl. கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் குழு.
Eclipse
n. வானகோளங்களின் ஔதமறைப்பு, இடைத்தடுப்பு, நிழலடிப்பு, ஔதமறைவு, ஔதமழுக்கம், மறுக்கம், கீழடிப்பு, கலங்கரை விளக்க ஔதயின் இடையிடை நிழலடிப்பு, இருட்டடிப்பு, (வினை) வானகோளங்களின் ஔதயை மறை, ஔதவட்டத்தை இடைநின்றுதடு, கோள்வட்ட மீது நிழலடி, கலங்கரை விளக்க ஔதயை இடையிட்டு நின்று மறை, ஔதமழுங்கவி, ஔதமங்கவை, விஞ்சிஔதவீசு, கடந்துமேம்பாடுறு, புகழ்விஞ்சு, வென்று மேலிடு.
Ecliptic
n. ஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி, கதிர் வீதி, (பெ.) கதிரிவீதிக்குரிய, வான்கோள மறைப்புச் சார்ந்த.
Eclogue
n. சிறு அளவான முல்லைப்பாட்டு, ஆயர் உரையாடற் பாட்டு.
Ecology
n. உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
Economic
a. பொருளியல் சார்ந்த, சிக்கனமான, வீண் செலவின்றிச் செட்டான, ஆதாயவண்மையுடைய, பயன்வளம்வாய்ந்த, கணித்துநோக்குகிற, செலவு கட்டிக்கொண்டு போகிற, பயன்கருதிய, பணம் கருதிய, தொழில் துறைத் தொடர்பான.
Economical
a. சிக்கனமான, வீணழிவு அற்ற, மிச்சப்படுத்துகிற, பொருளியல் நுல் சார்ந்த, நாட்டுப்பொருளியல் பற்றிய.
Economically
adv. சிக்கனமாக, சிக்கனத்தை முன்னிட்டுப் பார்க்கையில்.