English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Earliest, a. adv. Early
என்பதன் ஏற்றுயர்படி வடிவம்.
Earlock
n. காதின் அருகில் முன்னாட்களில் வளர்க்கப்பட்ட சுருள்முடி.
Early
a. தொடக்க நேரத்துக்குரிய, தொடக்க காலத்துக்குரிய, தொடக்கத்தை அடுத்த, முற்பகுதி சார்ந்த, முந்திவந்த, முற்பட்ட, முந்துற எழுந்த, முன்கூட்டிச் சித்தமான, முற்காலத்திய, தொலை இறந்தகாலத்திய, அணிமை வருங்காலத்திய, (வினை) குறித்த காலத்துக்கு முன், முன்கூடடி, சரியான நேரத்தில், விரைவில், முந்தி, முற்பட, தொடக்கத்தில், தொடக்கத்தை அடுத்து, முற்பகுதியில், காலை நேரத்தில், விடியற்காலததில்.
Earmark
n. விலங்கின் காதில் பொறிக்கப்படும் உரிமையாளரின் அடையாளம், தனிப்பட்ட உரிமைக்குறி, அடையாள முத்திரை, (வினை) தனிப்பட்ட அடையாள மிடு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கி வை.
Earn
v. ஈட்டு, உழைத்துப் பொருள் சம்பாதித, முயற்சியினால் பெறு, தகுதியினால் அடை, பெற்றுக்கொடு.
Earnest
-2 n. மெய்யார்வம், விளையாட்டற்ற தன்மை, மெய்யுறுதிப்பாடு, (பெ.) அக்கறையுள்ள, உள்ளார்வமிக்க, மனமார்ந்த வினைமையுடைய, விளையாட்டல்லாத, மனமார்ந்த, விமைமையுடைய, வேணவாவுடைய, முனைப்பார்வமுள்ள.
Earnings
n.pl. ஈட்டிய பொருள், ஊதியம், வருவாய்.
Ear-phone
n. தொலைபேசியில் செவியுடன் பொருந்தவைத்து ஒலி வாங்கும் கருவி.
Earring
n. காதணி, கடுக்கன், கம்மல்.
Earshot
n. காதுகேட்கும் தொலைவு, கூப்பிடு தூரம்.
Earth
n. நிலவுலகம்,தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள், பூவுலகக் கோளத்தின் மேல் தோடு, பூவுலகின் நிலப்பரப்பு, உலகம்ம, மண்ணுலகு, உலகுவாழ் உயிர்தொகுதி, உலகமக்கள் தொகுதி, நிலம், தரை, நிலத்தளம், மண், மண்புழுதி, மண்கட்டி, நிலவளை, சடப்பொருள், மனித உடல், மின் ஓட்ட நிலத்தொடர்பு, உலோக வகைகளின் துரு, (வினை) வேர்களை மண் குவித்தணை, மண் கொண்டு அணை, மண்ணால் மூடு, மண்பூசு, மண் கொண்டு தடு, மண்ணிற் புதை, மறைத்துவை, வளைதோண்டு, வளைக்குட்செல், மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Earth-bag
n. அரணமைப்பில் பயன்படும் மண் நிறைந்த கோணிப்பை.
Earth-bath
n. மண்ணாட்டு, மண்ணில் படிவுறும் குளிப்பு முறை, மண் வைப்பு, மண்ணிடை வைக்கும் முறை.
Earth-board
n. நிலனுழுபடையின் உறுப்பு வகை, கலப்பைக் கொழுவின் பக்க உறுப்பு.
Earth-born
n. நில உலகில் தோன்றிய, மண்ணுலகுக்குரிய, மண்ணில் தோன்றிய.
Earth-bound
a. நிலவுலகத் தொடர்புடைய, உலகியல் வாழ்வில் சிக்குண்ட.
Earth-bred
a. மண்ணில் தோன்றி வளர்ந்த,நிலமீது பிறந்து வளர்ந்த, கீழான, வெறுக்கத்தக்க.
Earth-closet
n. மண் மலக்கழிவிடம்.
Earthen
a. மண்ணால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் ஆன, மண்ணுக்குரிய.
Earthenware
n. மண்பாண்டங்களின் தொகுதி, மட்கலங்கள்.