English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Syndicate
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Syndication
n. உரிமைக் குழு நிறுவுகை, உரிமைக் குழு அமைவு, ஆட்சிக் குழுவாகச் செயலாற்றுதல், ஆட்சிக்குழு, உரிமைக்குழு.
Syndicator
n. பொருட்கூட்டமைப்பின் சார்பிற் கொடுக்கல் வாங்கல் செய்பவர்.
Syndrome
n. நோய்க்குறி ஒத்திசைவு, ஒத்திசைவு நோய்க்குறித் தொகுதி.
Syne
adv. இருந்து, வேளையிலிருந்து, காலந்தொட்டு.
Synecdoche
n. (இலக்.) ஆகுபெயர், சினையாகு பெயர், முதலாகு பெயர்.
Syneresis
n. உயிரெழுத்து ஒன்றுதல்.
Synesis
n. (இலக்.) பொருட்கொண்டுகூட்டு, அநவய அமைப்பு.
Syngenesis
n. இருபாலணுப் பொலிவுக் கருவாக்கம்.
Syngnathous
a. மீன் வகையில் கூம்பாக ஒட்டியிணைந்த தாடைகளையுடைய.
Synizesis
n. (இலக்.) ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு, விழித்திரை மூடாக்கு, பார்வையிழக்கும்படி விழித்திரை கவிதல், இன அணுமக் குறைமம், கருவணுப் பிளவீட்டுப் பருவத்தில் நிறக்கீற்றெதுக்கம்.
Synod
n. குருமன்றம், சமய குருமாரின் குழு, குருமார் கூட்டம், மாவட்டக் குருமார் சபை, நாட்டுக் குருமார் பேரவை, உலகக் குருமார் மாநாடு, சமய ஆட்சிக் குழு முறைமன்றம், சொற்போர்க் கூட்டம், (வான்.) கோள்-விண்மீன் குழுமம்.
Synoecious
a. தாவரங்களுள் ஆண் பெண் உறுப்புக்களை ஒருங்கே ஒரு கொத்தினுட் கொண்ட, முரண் தொடையான.
Synonym
n. ஒரு பொருட் பன்மொழி, இணைபொருட்சொல்.
Synonym dictionary
இணைச்சொல் அகராதி
Synonymic
a. ஒரு பொருட் பன்மொழி சார்ந்த, இணைபொருளுடைய.
Synonymity
n. ஒரே பொருளுடைமை, பொருளொப்புடைமை.
Synonymous
a. ஒரே பொருள் உடைய, ஒருபொருட் பிறசொல்லான.
Synonymy
n. ஒரு பொருட் பல சொல் வழக்கு உத்தி, ஒரே பொருளுடைமை, அழுத்தம் பற்றி ஒரு பொருட் பல சொல் வழங்கும் முறை, ஒரு பொருட் பல சொல் தொகுதி, இணைபொருட் சொல்லாய்வு, ஒரு பொருட் பன்மொழி ஆயவு ஏடு.
Synopsis
n. பொருட் சுருக்கம், பொழிப்பு மணிச்சுருக்கம், செறிவு.