English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Symbolize
v. சின்னமாயமை, அடையாளமாயிரு, சங்கேதமாகத் தெரிவி, குறித்துக்காட்டு, குறியீட்டாற் குறிப்பிடு, குறியீடுகளால் தெரிவி, உருவகமாகக் குறிப்பிடு, உருவகச் சார்பு புகுத்து.
Symmetric, symmetrical
a. செவ்வொழுங்கான, செஞ்சீரான, செப்பமுடைய, (தாவ.) சரிசீரமைவுடைய, உறுப்புக்களை ஒத்த எண்ணிக்கையுடையனவாகக் கொண்ட.
Symmetrically
adv. ஒத்தியைவாக, செவ்வொழுங்காக.
Symmetry
n. செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.
Sympalmorgraph
n. ஒலியலைப் பதிவுக்கருவி.
Sympathetic
n. பரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய.
Sympathize
v. ஒத்துணர்வு காட்டு, உடனோத்துணர், பரிவிரக்கங்கொள், மற்றவர் மனப்பாங்கு உணர், உடனிரங்கு, ஒத்தியைபுகொள், உடனதிர்வு கொள்.
Sympathy
n. ஒத்துணர்வு, உணர்ச்சி ஒருமைப்பாடு, ஒத்த உள்ளுணர்வீடுபாடு, ஒத்துணர்வாற்றல், உடனுணர்வுத்திறம், பரிவு, பரிவிரக்கம், உணர்வொத்தியைபு, கருத்து ஒப்புயைபு, ஒத்தியைபதிர்வு, உடனதிர்வுத் தொடர்பு.
Sympelmous
a. இணை மடக்கமான, பறடைவ வகையில் கால்விரல்கள் ஒருங்குமடங்கும்படி விரல் நரம்பு நாண்கள் ஒருங்கிணைவு பெற்றுள்ள.
Sympetalous
a. மலர்வகையில் ஒருங்கிணை இதழ்களையுடைய, செடிவகையில் ஒருங்கிணை இதழ் மலரினையுடைய.
Symphile
n. விருந்துயிர், எறும்பு-கறையான் சமுதாயத்தில் உடன்வாழும்படி வைத்து வளர்க்கப்பட்ட உயிர், பாயில்வுயிர், எறும்பு-கரையான் சமுதாயத்தில் வைத்துப் பேணி வளர்க்கப்படும் உயிர்.
Symphilism
n. பயில்வுயிர்ப் பண்பு, எறும்பு-கறையான சமுதாயத்தில் விருந்துயிராகவோ பயில்வுயிராகவோ பிறஉயிர் வைத்து வளர்க்கப்படும் பண்பு.
Symphilous
a. பயில்வுயிர் இணைவுப் பண்புடைய.
Symphonious
a. இசை வகையில் ஒத்திசைவான, ஓசைவகையில் ஒத்தியைந்த.
Symphonist
n. சுரமேளம் பாடுபவர், சுரமேள இசை இயற்றுநர்.
Symphony
n. இயைவுகொள் பல்லியம், கூடுகொள் இன்னியம்.
Symphyllous
a. கூட்டிலை வாய்ந்த, ஒருங்கியைந்த இலைகளையுடைய.
Symphyseal
a. கூட்டிணை வளர்ச்சி சார்ந்த, ஒருங்கிணைந்து வளர்கிற.
Symphyseotomy
n. கூட்டிணை வளர்ச்சி அறுவை.
Symphysis
n. கூட்டிணை வளர்ச்சி, எலும்பொருங்கிணைவு, கூட்டுக்கணு.