English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Syllabification
n. அசைப்பிரிவீடு, அசையலகுமுறை.
Syllabify
v. அசை ஆக்கு, அசை அசையாகப் பிரி, அசைஅலகிடு.
Syllabize
v. அசையாகப் பிரி.
Syllable
n. அசை, (வினை.) அசை அசையாய் உச்சரி, தௌதவாய் உச்சரி, (செய்.) பெயர் குறி, சொற்குறியிடு.
Syllabus
n. பாடத்திட்டம், வேலை நடைமுறைத் திட்டம், சொற்பொழிவுத் தலைப்புக்குறிப்பத் தொகுதி, ரோமன் கத்தோலிக்க வழக்கில் போப்பாண்டவரால் கண்டிக்கப்பட்ட கொள்கை நடைமுறைத் தொகுதிப்பட்டியல்.
Syllepsis
n. ஒருவழித் தழுவல் மயக்க அணி, (இலக்.) ஒரு வழித தழுவல் வழக்கு.
Sylleptic
a. ஒருவழித்தழுவல் மயக்க அணி சார்ந்த, (இலக்.) ஒருவழித்தழுவலான.
Syllogism
n. (அள.) முக்கூற்று முடிவு, விதிதருமுறைவாதம், நேரியல் வாதமுறை.
Syllogistic, syllogistical
a. (அள.) முக்கூற்று முடிவு சார்ந்த, விதிதரு முறையான, நேரியல் வாத முறைன.
Syllogize
v. முக்கூற்று முடிபு பயன்படுத்து, விதிதருமுறை பயன்படுத்து, வாதங்களை முக்கூற்று முறையில் செறிவி, விதியை முக்கூற்று முறைப்படி வருவி.
Sylph
n. ஆரணங்கு, ஐம்பெரும் பூதம் சார்ந்த தெய்வதம், நிலத்தெய்வதம், நீர்த்தெய்வதம், அழல் தெய்வதம், இம்மென ஒலிக்கும் பறவை வகை.
Sylvan
a. முல்லை சார்ந்த.
Sylviculture
n. காடு வளர்ப்பு.
Symbion, symboint
ஒத்துடன் நிற்றி,ஒருங்கொத்தியை வாழ்வுத் திறமுடைய உயிர்களுள் ஒன்று.
Symbiosis
n. இணைவாழ்வுத்திறம், ஒத்தியை வாழ்வுப்பண்பு.
Symbiotic
a. இணைதிற வாழ்வுத் திறமுடைய.
Symbiotically
adv. இணைவாழ்வுத் திறம்பட, இணைவாழ்வுத் திறச் சார்பாக.
Symbol
n. சின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு.
Symbolic, symbolical
a. குறியீடாயமைந்த, அடையாளமான, உருவக வடிவான, குறியீட்டுருவான.
Symbolism
n. குறியீட்டமர்வு.