English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Indulgence
n. சலுகை காட்டுதல், சலுகையளிப்பு, தனிச்சிறப்புரிமை, தனிப்பட வழங்கப்பட்ட உரிமை, செல்டலம்ட, இளக்காரம், இன்பத்தோய்வு, மட்டற்ற நுகர்வு, தண்டனைக் குப்பு, சலுகை, பாவமன்னிப்புச் சலுகை.
Indulgenced
a. வழங்குவோருக்குச் சிறப்புரிமை ஏற்பாடுடைய.
Indult
n. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பொதுவிதி முறைகளின் இசைவில்லாவிடத்தில் பெறப்படும் போப்பாண்டவர் தனிச் சலுகையுரிமை.
Induna
n. தென் ஆப்பிரிக்காவில் குடிமரபுத் தலைவர்.
Indurate
v. கடினமாக்கு, உணர்ச்சியறச்செய், நீண்ட காலப் பழக்கத்தினால் காழ்ப்பறு, காய்ப்படை.
Indusium
n. சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம், சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி, முட்டைப்புழுவின் மேலுறை.
Industrial
n. தொழிற்துறையாளர், (பெயரடை) கைத்தொழில் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழில் சார்ந்த, பெருந்தொழில் சார்ந்த, இயந்திரத்தொழில் சார்ந்த, தொழில் துறைக்கென்றமைக்கப்பட்ட, தொழிற்துறையில் பெருவழக்கான.
Industrial corporation
தொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம்
Industrious
a. கடுமையாக உழைக்கிற, பெருமுயற்சியுள்ள, செயலுக்கமுள்ள, சுறுசுறுப்பான உழைக்கிற.
Industry
n. விடாமுயற்சி, கடும் உழைப்பு, பயன்தரும் வேலை ஈடுபாடு, வாணிக முயற்சி, தொழில்துறை.
Industry
தொழிலகம், தொழில்கள்
Indwell
v. உள்ளமர்ந்திரு, உள்ளுறைவாயிரு, தங்கிவாழ், தங்கியிரு, நிலவரமாக அமர்ந்திரு.
Inebriate
n. குடிகாரர், குடிப்பழக்கமுள்ளவர், (பெயரடை) குடிவெறியேறிய, (வினை) குடிவெறியேறியவனுக்கு, வெறிகொள்ளுவி கிளர்ச்சி கொள்ளுவி.
Inebriety
n. மதுமயக்கம், குடிவெறியேறிய நிலை, குடிப்பழக்கம்.
Inedited
a. வௌதயிடப்படாத, பதிப்பாசிரியரின் திருத்த மாறுதல்களின்றி வௌதயிடப்பட்ட.
Ineffable
a. சொல்லுதற்கரிய, வருணனைக்கடங்காத.
Ineffaceable
a. துடைத்தழிக்க முடியாத, நிலையான தடமுடைய.
Ineffective
a. பயன்படாத,. விளைபயனற்ற, விரும்பிய விளைவினை உண்டுபண்ணாத, திறமையற்ற, கலைத்திறம் படாத.
Ineffectual,
விளைபயனில்லாத, பலனற்ற, வீணான.