English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Indo-European, Indo-Germanic
a. (பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த.
Indo-Iranian
a. இந்தியா பாரசீகம், ஆகிய நாடகளில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-நுரோப்பிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவைச் சார்ந்த.
Indolent
a. சோம்பலான, மடிமையுடைய, வேலை செய்யமனமில்லாத, (மரு) நோவு தராத, வேதனை உண்டு பண்ணாத.
Indomitable
a. வெல்லமுடியாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற, பிடிவாதமான, தளர்வுறாத, வளையாத, பணிதலில்லாத.
Indoor
a. வீட்டிற்குள் இருக்கிற, மனையக, வீட்டுக்குள் நிகழ்த்தப்படுகிற, மதிலக, தொழிற்சாலைக் கட்டிடத்துக்குட்பட்ட.
Indoors
adv. வீட்டிற்குள், மறைவில்.
Indorsation,
புறவரி, மேலெழுத்து, ஆதரித்து எழுதுதல்.
Indorsee
n. புறவரிக்குரியவர், மேல் வரியில் ஆதரித்து எழுதப்பெற்றவர்.
Indraft, indraught
உள்ளீர்ப்பு, உள்ளொழுக்கு, உள்நோக்கிய பாய்ச்சல்.
Indri
n. மடகாஸ்கர் தீவில் இரவில் உலாவும் நீண்ட முகமுடைய குரங்கினம்.
Indubitable
a. ஐயத்துக்கிடமற்ற, உறுதியான.
Induce
v. தூண்டு, இணக்குவி, தூண்டிச் செயலாற்றுவி, உண்டுபண்ணு, தோற்றுவி., கருத்து எழும்படிசெய், ஊகிக்கும்படி செய், உய்த்துணர்வி, கிளர் மின்னோட்டத்தை உண்டாக்,கு.
Inducement
n. தூண்டுதல், கிளறிவிடும் கவர்ச்சிப்பண்பு.
Induct;
v. மானிய வகையில் முறைப்படி உரிமையில் புகுவி, பதவியில் அமர்வி, அறையில் குடிமேற்கொள்ளுவி,. புகு முகம் செய்,. தொடக்கவினையாக்கு.
Inductile
a. கம்பியாக இழுக்க முடியாத.
Induction
n. புகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Induction-coil
n. அணுக்கமின்பாய்வுமூலம் நேர்மின்னோட்டத்தை மாற்றுமின்னோட்டமாக்கும் மின்சுருள்.
Inductive
a. விவவருநிலை சார்ந்த, தொகுப்பாய்வு முறைக்குரிய, உய்த்துணர்வு சார்ந்த,, கிளர்மின்னியலான, அணுக்கநிலை மின்பாய்வு சார்ந்த.
Inductor
n. புகுமுகவாணர், கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர், கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
Indulge,
அவாநிறைவுபடுத்து, திருப்திப்படுத்து, தற்போக்கில் ஊக்கு, மனம்போன போக்கில் போகவிடு, செல்லங்கொடு, சலுகை காட்டு, தற்போக்கில் நட, மனம்போன போக்கில்செல், சலுகை எடுத்துக்கொள்.