English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Indention
n. அச்சுத்துறை வகையில் ஓரத்தில் இடும் வெற்றிடம்.
Indenture
n. சட்டப்படி உருவான உடன்படிக்கைப் பத்திரம், தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், முறையான பட்டியல், நற்சான்றிதழ், அச்சுத்துறை வகையில்ஓர இடம் விடுகை, (வினை) தொழில்முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்துகொள்.இ
Independence
n. தற்சார்பு, தன்னுரிமை, தன்னாட்சி, சுதந்திரம், தற்சார்பான வருவாய்.
Independency
-1 n. கிறித்தவரிடையே திருக்கோயில் தன்னாட்சிக் குழுவினரின் கோட்பாடு.
Independency
-2 n. தன்னாட்சிநாடு, தற்சார்பான வருமானம், தன்னுரிமை.
Independent
-1 n. தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர், (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
Independent
-2 n. அரசியலில் கட்சி சாராதவர், தற்சார்பாளா, (பெயரடை) பிறிது சார்பற்ற, தற்சார்பான, தற்சார்புரிமையுடைய, சுதந்தரமான, தன்னிறையாட்சியுடைய, தன்னியலான, தனித்திய்குகிற, பிறர் ஆதரவு சாராத.
Indequality
n. ஒப்பின்மை, உயர்வுதாழ்வுநிலை, பரப்பின் ஒழுங்கற்ற தன்மை, மேடுபள்ள அமைவு, மாறுந்தன்மை, இயக்க வகையில் ஒழுங்குநிலையற்ற போக்கு.
Indescribable
a. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது.
Indestructibility
n. அழிவின்மை, அழிக்க முடியாநிலை.
Indestructible
a. அழிக்க முடியாத.
Indeterminable
a. கண்டுறுதி செய்ய முடியாத, முடிவு காண்பதற்கரிய, முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத, சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத.
Indeterminate
a. உறுதி நிலையற்ற, எல்லையறுதியற்ற,அளவுறுதியில்லாத, தௌதவற்ற, ஐயுறவு நிலையிலள்ள, (கண) முடிவு தேரப்பெறாத,.
Indetermination
n. முடிவுறுதியின்மை, உறுதியற்ற நிலை.
Indeterminism
n. அகநிலை மறுப்புக் கோட்பாடு, உள்நோக்கங்களினால் மட்டுமே மனிதனுடைய செயல் தீர்மானிக்கப்படவில்லை என்னும் கோட்பாடு.
Index
n. சுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
Indexing
அகரவரிசைப்படுதல்
India
n. இந்தியா, பாரத தேசம்.
Indiaman
n. இந்திய வாணிகத்தில் ஏற்படும் நீராவிக் கப்பல்.