English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bad debt
மீட்க முடியாத கடன்.
Bade, v. bid
என்பதன் இறந்த காலம்.
Badge
n. அடையாளக்குறி, சிறப்புக் குறியீடு, முத்திரைப் பொறிபு, சின்னம்.
Badger
n. வளைக்கரடி, வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை, கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை, (வினை) ஆர்வத்தோடு பின்பற்று, தொந்தரவு செய், துன்புறுத்து, தொல்லைகொடு, நச்சரி.
Badger-baiting. Badger-drawing
n. கரடி வெருட்டு, கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வௌதப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு.
Badger-legged
a. குட்டையும் நெட்டையுமான காலம்களையுடைய.
Badgerly
a. வளைக்கரடி போன்ற, நரையுள்ள, முப்புவாய்ந்த.
Badinage
n. நயநாகரிகக்கேலி, மென்னயம் வாய்ந்த ஏளனம்.
Badly
adv. தவறாக, குறைபாட்டுடன், வெற்றி பெறாமல், சீர்கேடாக, இரக்கமற்ற முறையில், இடருக்கு ஆட்பட்டு, மிகமோசமாக, மிக அவசியமாக.
Badmash
n. (பெர்) போக்கிரி.
Badminton
n. பூப்பந்தாட்டம், வேனிற்கால இன்னீர்க் கலவை.
Badness
n. தீமை, தீங்கு, கேடு, கெடுபண்பு, கீழ்த்தரம்,
Bael
n. கூவிளமரம், வில்வக்கனி.
Baff
v. குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி.
Baffle
n. நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய்.
Baffle-board
n. ஒசை பரவுவதைத் தடுக்கும் அமைவு.
Baffle-plate
n. நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு.
Baffler
n. குழப்பமடையச் செய்பவர், தடுமாறச் செய்பவர், திகைக்க வைப்பவர்.
Baffling
a. திகைப்பை உண்டாக்குகிற, தடைசெய்கிற.