English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Yeasty
a. நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற.
Yegg,yeggman
(இழி.) நாடோ டித் திருடன், இரும்புப் பெட்டி உடைத்துத் திருடுபவன்.
Yelk
n. (பழ.,அரு.) முட்டை மஞ்சட்கரு, கம்பளி நெய்,மஞ்சட்கருப் பொதிவாடை.
Yell
n. கூக்குரல்,கூவிளி,விளையாட்டுப் பந்தய ஊக்கார வாரம், (வினை) கூக்குரலிடு,கத்து, ஊளையிடு.
Yellow
n. மஞ்சள் நிறம்,முட்டையின் மஞ்சட்கரு, மஞ்சள் வண்ணப்பொடி,குதிரைக் காமாலைநோய்,(பே-வ)கோழை,பட்டுப்பூச்சி வகை, (பெ.) மஞ்சள் நிறமுடைய, பொன்னிறமான, கந்தக நிறமான, மஞ்சள் இனஞ் சார்ந்த, மங்கோலிய இனத்தவர்க்குரிய, கறுப்பு வௌளையினக் கலப்புச் சார்ந்த, (பே-வ.) அழுக்காறுடைய,பொறாமைத் தன்மை வாய்ந்த,(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட,(பே-வ.)கோழைத்தனமான,(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற.
Yellow-boy
n. (இழி.) தங்க நாணயம், வௌளையரல்லாப் படைவீரர்.
Yellow-earth
n. மஞ்சட் காவிமண்.
Yellow-flag
n. கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி.
Yellow-girl
n. (இழி.) தங்க நாணயம், வௌளை இனஞ்சாராப் படைத்துறைப்பெண்.
Yellow-gum
n. குழந்தைக் காமாலை நோய்.
Yellow-hammer
n. மஞ்சள் தலைப் பறவை வகை.
Yellowish
a. சற்றே மஞ்சளான.
Yellowness
n. மஞ்சள் நிறமுடைமை,மஞ்சள் தன்மை, மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை, பழுப்பு,(பழ.)பொறாமை.
Yellows
n.pl. மஞ்சள் காமாலை, தாவரப் பழுப்பு நோய்,(பழ.) பொறாமை.
Yellowy
a. மஞ்சட் சாயலார்ந்த.
Yelp
n. நாயின் வேதனை உறுமல், நாயின் ஆர்வ அவாக்குரைப்பு, (வினை) நாய்வகையில் ஆர்வ அவாக் குரைப்புக் குரல் எழுப்பு, நாய்வகையில் வேதனைக் குரல் கொடு.
Yen
-1 n. ஜப்பானிய மதிப்பலகு நாணயம்.
Yen
-2 n. (இழி) நீடவா, ஆர்வ விருப்பம், (வினை) ஏங்குறு, நீட வாக்கொள்.
Yeoman
n. நிலக்கிழார்,குறு நிலக்கிழார்,இடைத்தர வகுப்புக் குடியானவர், விருப்பார்வத் தொண்டர், சிறு பணியாளர், நாவாய்ச் சேவையர், கப்பல்துறைச் சிறு சேவையாளர், (வர.)வேளாண் குடிமகன்,ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்,(வர.) வேட்குடிச் சான்றாளர், ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர், புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.
Yeomanry
n. குறுநிலக்கிழார் வகுப்பு, குடியானவர்களின் குதிரைப்படை.