English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sea-island cotton
n. நீள் துய் உடைய நயமிக்க முன்னாட் பருத்திவக.
Sea-king
n. கடலரசன், முற்கால ஸ்காண்டினேவிய கடற்கொள்ளைத் தலைவன்.
Seal
-1 n. கடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு.
Seal
-2 n. முத்திரை, ஆவணத்தின்மீதிடும் பொறிப்படையாளம், இலாஞ்சனை,ஆவணத்தின் மீது பதிப்பிக்கும் மெழுகு அல்லது ஈயத்துண்டின் மீழ்ன பொறிப்பு, உடைபடாக் காப்பு முத்திரை, தாள் அல்லது உலோகத் தகட்டலான உடைபடாத் தடைகாப்பிணைப்புப்பட்டி, முத்திரைக் குறிப்பு, பொறிப்பு அடையாளம
Sea-legs
n. கொந்தளிப்புக் கடலிலும் கப்பல்தளத்தின் மீவம் நடக்கும் ஆற்றல்.
Sealer
n. கடல்நாய் வேட்டையாடுவதற்குரிய கப்பல்.
Sealery, seal-fishery
n. கடல்நாய் வேட்டை.
Sea-letter
n. போர்க்கால நொதுமற் கப்பல் காப்புக்குறிப்பு போரிலீடுபடாத நாட்டுக்கப்பலின் ஆட்கள்-சரக்குகள் முதலிய விவரமடங்கிய காப்புக்கடிதம்.
Seal-fishing, sealing
கடல்நாய் வேட்டையாடுதல், கடல்நாய் வேட்டை.
Sealing-wax
n. அரக்கு, முத்திரை மெழுகு.
Seal-line
n. கடல்வான்வரை, கடல்தள வானவிளிம்பு.
Seal-pipe
n. குமிழிக்குழாய், வளியாக்க அமைவில் நீரில் மூழ்கி வளி வௌதவிடம் குழாய்.
Seal-ring
n. முத்திரை மோதிரம்.
Seal-rookery
n. கடல்நாய் இனப் பண்ணை, கடல்நாய் இனம் பெருகும் இடம்.
Sealskin
n. பதனிடப்பட்ட கடல்நாய்த் தோல், கடல்நாய்த் தோற்போலி.
Sealwort
n. அல்லியின் மலர்ச்செடி வகை.
Sealyham, Sealyham terrier
n. அகழ்ஞாளி, சுறுசுறுப்பும் வலிமையுந் தோண்டும் இயல்புமுடைய சிறுநாய் வகை.
Seam
n. தையல் விளிம்பு, பலகைகளின் பொருத்து, மூட்டுவாய், பொருத்தின் இடைவௌத, தழும்பு, கைப்புத்தடம், இலைத்தடம், விதை அடித்தழும்பு, வெடிப்பு, வெட்டுவாய், சுரிப்பு, இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு, அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை, (உள்.) எலும்பின் பூட்டுவாய், காயத்தின் தைப்புவாய், (வினை.) விளிம்பு அல்லது கரை அமை, தடமிடு, அடையாளமாகக் குறி, மூட்டுப்பிரி, மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு, தையலிட்டு இணை.
Seamanlike
a. கடலாண்மைத் திறமுடைய.