English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scale-work
n. ஒன்றன் மீது ஒன்று அமைந்துள்ள ஒழுங்கமைவு ஒப்பனை, அடை அடுக்கமைவு.
Scallop
n. இரட்டைவரிச்சோழி, நத்தை வகை, புண்ணியாத்திரிகர் வரிச்சோழிச்சின்னம், சிப்பி வறுக்கும் வட்டில், உண்கல ஏந்துவட்டில், (வினை.) வாணலியில் இட்டுப் பக்குவப்படுத்து, சிப்பிவரைபோன்ற ஓரவரி அணிசெய்.
Scallops
n. pl. நத்தையோடு ஒத்த ஓரவரியுடைய அணிவகை.
Scallop-shell
n. சிப்பி, நத்தையோடு.
Scalp
n. தலையுச்சிவட்டம், உச்சிவட்டக்குடுமித் தோல், அமெரிக்க செவ்விந்திய பழங்குடிமக்கள் வழக்கில் வெற்றிக்கு அறிகுறியாகக் கிழித்தெடுத்து அணிந்து கொள்ளப்படும் எதிரியின் வட்டக்குடுமித் தோல், வன்பால் மலைமுகடு, திமிங்கிலத் தலை மேற்பகுதி, (வினை.) செவ்விந்திய வழக்கில்தோற்றவரின் குடுமித்தோலைக் கீறி எடு, ஈவிரக்கமின்றிக்குறை இறக்கு.
Scalper
-1 n. செதுக்குவினைஞரின் உருள்முனை உளி, அறுவை மருத்துவர் அரம்.
Scalper
-2 n. செவ்விந்தியரின் குடுமித்தோல் அறுத்தெடுக்குங் கத்தி.
Scalpless
a. குடுமித்தோலற்ற. செவ்விந்தியர் வழக்கில் வெற்றிபெற்ற பகைவரால் குடுமித்தோல் பறித்தெடுக்கப்பெற்ற, மொட்டையான.
Scalp-lock
n. உச்சிவட்டத் தோற்குடுமி, செவ்விந்தியர்வழக்கில் வீர வெற்றிதோல்விக்கறிகுறியாகக் கொள்ளப்படும் உச்சிவட்டத்தோலுடன் விடப்படும் குடுமி.
Scalpriform
n. உளிவடிவான முன்வாய்ப்பல்.
Scaly
a. செதிள்கள் மூடிய, செதிள்கள் போன்ற, கந்தையணிந்துள்ள, இழிதோற்றமுடைய, செதிள்களால் ஆன, செதிள்களாக உதிர்ந்துவிடும் பாங்குள்ள.
Scammony
n. கடும்பேதிமருந்தாகப் பயன்படும் பிசின்வகை, பிசின் வகைதரும் பின்னுகொடி வகை.
Scamp
-1 n. கயவன், போக்கிரி, செல்லப்பெயர் வகை.
Scamp
-2 v. கடனுக்குப் பணியாற்று, அரைகுறை வேலைசெய்.
Scamper
n. விரைகுதியோட்டம், எழுச்சிமிக்க பாய்ச்சல், இன்பக் குதிரைச்சவாரி, விரைவிப்பயணம், வேக வாசிப்பு, (வினை.) விலங்கு வகையில் கலசலாகஓடு, குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு, குதியாட்டமிட்டுச் செல்.
Scampish
a. போக்கிரித்தனமான, கயமைத்தனமான.
Scan
v. அலகிடு, அசைசீர், பொருத்தம் தேர்ந்தாராய், ஒத்திசைவு ஆய்ந்து காண், ஒசைநயம் தோன்ற அமைவுறு, அசைசீர் சரியாக அமைவுறு, கூர்ந்துபார், நுணுகி ஆராய்ந்து நோக்கு, தொலைக்காட்சி வகையில் தொலைக்கனுப்பும்படி நிழல்-ஔதக் கூறுகளைத் தனித்தனி பிரித்தெடு.