English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kukri
n. இருமுனைகளிலும் அகன்று வளைந்த கூர்க்க வீரரின் கொடுவாள்.
Kulak
n. செல்வ வளங்களையுடைய ருசிய நாட்டுக் குடியானவர்.
Kultur
n. பண்பாடு, நாகரிகம், நாகரிகப்படிவம்.
Kulturkampf
n. பள்ளி-கொயில்கள் நிர்வாகம் பற்றி முற்காலச் செர்மன் பேரரசாட்சியாளர்க்கும் போப் ஆண்டவருக்கும் இடையேயுள்ள பூசல்.
Kummeel
n. சோம்பு மணமூட்டப்பட்ட இன்தேறல் வகை.
Kuomintang
n. சீனாவில் (1ஹீ12-இல்) நிறுவப்பட்ட தேசீயப் புரட்சிக் கட்சி.
Kurd
n. கூர்டிஸ்தான் குடிமகன்.
Kursaal
n. செர்மானிய உடல்நலத் தலங்களிற் பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டிடம்
Kvass
n. கம்பு போன்ற ஒருவகைத் தானியத்தினின்று இறக்கப்படும் ருசியநாட்டுக் குடிவகை.
Kwashiorkor
n. வெப்ப நாடுகளிற் புரதச்சத்துப் போதாமையால் வரும் நோய் வகை.
Kwela
n. தென் ஆப்பிரிக்க சூலு மக்கள் பாடல் வகை.
Kyanize
v. மரங்கள் உளுத்து அல்லது மக்கிப் போகாமல் தடுக்கும் 'வீரம்' கலந்த கரைசலைப் பூசு.
Kyat
n. பொதுச் செலாவணியிலுள்ள பர்மிய நாணயம்.
Kylin
n. சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள்.
Kyloe
n. ஸ்காத்லாந்து நாட்டில் வளர்க்கப்படும் நீண்ட கொம்புடைய குட்டையான மாடு வகை.
Kymograph
n. ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யுங் கருவி.
Kyrie eleison
n. கிரேக்க ரோம திருக்கோயில்களில் வழிபாட்டின் போது கூறப்படும் வழிபாட்டுச் சொற்றொடர், வழிவாட்டுச் சொற்றொடர் சார்ந்த வின்னணி இசையமைப்பு, ஆங்கிலத் திருக்கோயில்களில் 'நற்கருணை' வழிபாட்டின் போது சமயகுருவின் கட்டளைகளுக்க அளிக்கப்படும் மறு மொழி.