English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Irresolute
a. ஒரு முடிவுக்கு வராத, தயக்கம் வாய்ந்த, மன உறுதியற்ற, திடசித்தமில்லாத.
Irresolvable
a. கூறுகளாகப்பிரிக்க முடியாத, விடுவிக்க முடியாத, சிக்கலகற்ற இயலாத.
Irrespective
a. கணக்கில் சேர்க்காமலேயுள்ள, நீக்கிக்கணிக்கிற, பொருட்படுத்தாத.
Irresponsible
a. பொறுப்பற்ற, பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற, பொறுப்புணர்ச்சியில்லாத, கவலையற்ற, மனம்போல நடக்கிற.
Irresponsive
a. ஏனென்று கேளாத, எதிர் விளைவற்ற.
Irretention
n. அடக்கி வைக்க முடியாமை, சிறுநீர் அடக்க முடியாநிலை.
Irretentive
a. மறதியுடைய, மனத்தில் நிறுத்தி வைக்க முடியாத.
Irretrievable
a. சீர்ப்படுத்த முடியாத, ஈடு செய்ய முடியாத, மீட்க முடியாத.
Irreverent
a. மட்டு மதிப்பற்ற, பணிவிணக்கமற்ற.
Irreversible
a. மாற்ற முடியாத, திருப்பிமறிக்க முடியாத.
Irrevocable
a. மாற்ற முடியாத, கை கடந்து போன, மீட்டுப் பெறமுடியாத.
Irrigate
v. நீர்ப்பாசன வசதி செய், கால்வாய்கள் மூலம் நீர் பாய்ச்சு, ஈரப்பதம் செய்து வளப்பமூட்டு, (மரு) காயத்துக்குத் தரையூற்றிக் குளிர் நிலைப்படுத்து.
Irrigation
n. நீர்ப்பாசனம்.
Irritable
a. எளிதிற்சினங்கொள்கிற, முன்கோபியான, வெடுவெடுப்பான, உறுப்பு முதலியவற்றின் வகையில் கூறுணர்ச்சியுள்ள, தொட்டால் கூச்சமுள்ள, தசைகள் வகையில் புறத்தூண்டுதலினால் உயிர்ப்பியக்கம்.
Irritancy
-1 n. சினம், எரிவந்தம், அழற்சி, தொல்லை, இடைஞ்சல்.
Irritancy
-2 n. (சட்) செல்லுபடியாகாததாகச் செய்தல், செல்லுபடியாகாதிருத்தல்.
Irritant
n. உறுத்தி, எரிவந்தம் கொடுக்கும் பொருள், (பெயரடை) சினமூட்டுகிற, அழற்றுகிற, எரிவந்தம் தருகிற.
Irritate
-1 v. சினமூட்டு. எரிச்சற்படுத்து, துயரளி, உறுப்பு, முதலியவற்றில் உறுத்தல் உண்டாக்கு, உறுப்பினை உயிர்ப்பியக்கம் கொள்ளும்படி தூண்டு.
Irritate
-2 v. (சட்) செல்லாததாக்கு, முற்றும் தவறென்று தள்ளு.
Irritation
n. சினமூட்டல், அழற்சி, உறுத்தல், தினவு, நமை, நமைச்சல்.