English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Infectious
a. தொற்றுகிற, நோய்பரப்புகிற, கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த, நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய, உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
Infective
a. தொற்றவைக்குடம் இயல்புடைய, பழுதாக்குகிற, பரவக்கூடிய.,
Infelicific
a. மகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற.
Infelicitous
a. மகிழ்ச்சிக்கேடான, மங்கலக்கேடான, நற்பொருத்தமற்ற.
Infelicity
n. மகிழ்ச்சிக்கேடு, அவப்பேறு, அமங்கலம், சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை.
Infer
v. உய்த்துணர், அனுமானி, ஊகி, வருவி, முடிவு செய், உய்த்துணரவை.
Inferable
a. அனுமானிக்கத்தக்க, ஊகத்தால் பெறக்கூடிய.
Inference
n. ஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள்.
Inferior
n. கீழோர், தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர், (பெயரடை) கீழ் உள்ள, தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த, மட்ட வகையான, கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய, அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற, (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள, கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
Inferiority
n. இழிவு, இளப்பம், தாழ்வு.
Infernal,a.
அளறு சார்ந்த, நரகத்தின் இயல்புடைய, கீழலகுக்குரிய, பேயுலகுக்குரிய, மோசமான, வெறுக்கத்தக்க, கொடுமை வாய்ந்த.
Infertile
a. வறண்ட, செழிப்பற்ற.
Infest,
சூழ்ந்து தாக்கு, மொய்த்தலைக்கழி, நோய் நுண்ம வகையில் பரவி ஊடாடு, நோய்வகையில் சுற்றி நிலவு.
Infestation
n. மொய்ப்பு, ஊடாட்டம், சுற்றி வளைப்பு, திரண்டதாக்குதல், தாக்குதலுக்கு ஆட்பட்டநிலை.
Infeudation
n. மானிய அளிப்பு, நிலத்தை மானியமாக விடல்.
Infibulation
n. விழைச்சுக்கட்டு, புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புக்களைக் கொக்கினால் கட்டிவிடும் முறை.
Infidel
n..சமயநம்பிக்கையற்றவர், (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர், யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர், பொதுப்படையான நோக்கில் புறச்சமயி, நாத்திகர், (பெயரடை) சமய நம்பிக்கையற்ற, புறச்சமயிகள் சார்ந்த.
Infideltiy
n. கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை, பற்றுறுதியின்மை, கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை, வஞ்ச ஒழுக்கம்.
Infield
n. மனையணைநிலம், குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம், உழ்த்தகுந்த நிலம், ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம், மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
Infiltrate
v. இறு, வடித்தெடு, கசிந்து வடியப்பண்ணு, கசிந்து பரவச்செய், கசிந்துவடி, ஊடுருவிப்பரவு.