English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inextricable
a. விடுவிதுத்துக்கொள்ள முடியாத, சிக்கறுக்க முடியாத, தீர்வுகாண இயலாத, தப்பிச்செல்ல வழிதராத.
Infallibilism
n. போப்பாண்டவர் பற்றிய பிழைபாடின்மைக் கோட்பாடு.
Infallibility
n. தவறமாட்டாமை, பிழையாத்தன்மை.
Infallible
a. தவறாநிலையுடைய, தவறிழைக்காத, பிழையாத.
Infamize
v. பழிதூற்று, பழிக்களாக்கு.
Infamous
a. இகழார்ந்த, பழிக்கப்பட்ட, இழிந்தவரெனப் பேரெடுத்த, அருவருப்பான, வெறுக்கத்தக்க, மோசமான, (சட்) பொல்லாத குற்றத்துக்காகக் குடிமகனுக்குரிய உரிமைகள் சில அல்லது அனைத்தும் பறிக்கப்பெற்ற.
Infamy
n. பெரும்பழி, பொது அவமதிப்பு, உலகப்பழிப்பு, இழிபழி, (சட்) கொடும்பழி காரணமாகச் சான்றானளராக முடியாத கறை.
Infancy
n. குழந்தைத்தன்மை, குழந்தைப்பருவம், பாலப் பருவ நாட்கள், வளர்ச்சியின்ட தொடக்கநிலை, (சட்) வயது வராப் பருவம், 21 வயதுக்குட்பட்ட பருவம்.
Infant
n. குழந்தை, ஹ் வயதுக்குட்பட்ட சிறுவன், ஹ் வயதுக்குட்பட்ட சிறுமி, (சட்) 21 வயதுக்குட்பட்டவர்ர, வயதுவராதவர்.
Infanta
n. ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
Infante
n. ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
Infanticide
n. குழந்தைக்கொலை, பெரும்பாலும் தாயுடந்தையாய் இருக்கும் நிலையுடைய குழந்தைக்கொலை, பிறந்தவுடன் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம்.
Infantile
a. குழந்தைகளைப்போன்ற, குழந்தைகளுக்குரிய, தொடக்க நிலையிலிருக்கிற, குழந்தைப்பருவத்துக்குரிய.
Infantilism
n. (மரு) அறிவோ உடம்போ வளர்ச்சி யடையாத நிலை, உடலுள வளர்ச்சியற்ற நிலை.
Infantry
n. காலாட்படை, இளவணி.
Infantryman
n. காலாட்படை வகுப்பைச் சேர்ந்த வீரன்.
Infatuate
v. மருட்சியூட்டி அறிவிழக்கச் செய், முட்டாளாக்கு, மயக்கு, மோகவலையுட்படுத்து.
Infatuation
n. மையல், மோகம், கைம்மயக்கம்.
Infect
v. நோய் நுண்மங்கள் பரப்பி நச்சுப்படுத்து, நோய் பற்றுவி, காற்றில் நிரப்புவி, பழுதாக்கு, கெடு, கறைப்படுத்து, உள்ளத்தில் தீயபண்பு பற்றுவி, கருத்து மேற்கொள்ளச்செய்.
Infection
n. தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.