English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hyphen
n. சொல்லிடை இணைப்புக்குறி, ஒட்டுக்குறி, ஒலிப்பில் அசையுடையே நிகழும் இடைத் தயக்கநிலை, (வி.) இணைப்புக் குறியிட்டு இணை.
Hyphenate
v. இணைப்புக் குறியிடு.
Hypnogenesis
n. துஞ்சுநிலை தூண்டிவிடல்.
Hypnogentic
a. அறிதுயில்நிலை தூண்டுகிற.
Hypnology
n. மன ஆற்றலால் அறிதுயிலுட்டுதல் பற்றிய ஆய்வுநுல்.
Hypnosis
n. மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில், அறிதுயில் நிலை.
Hypnotic
n. துயிலுட்டுவது, மனஆற்றலால் தூண்டப்படும் அறிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர், (பெ.) மன ஆற்றலால் தூண்டப்படும் அறிதுயலுக்குரிய, அறிதுயில்நிலையை உண்டுபண்ணுகிற.
Hypnotism
n. தரவுதுயில், சம்மோகனம், புறத்தூண்டுதலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான ஆழ்ந்த அறிதுயில்நிலை.
Hypo
n. மாற்றுநிலை உவரகக் கந்தகி வகை, உவரகச் சேர்ம வகையில் உயிரக அணுக்களினிடமாகக் கந்தக அணுக்கள் இடம்பெற்ற உவரகக் கந்தகி.
Hypoblast
n. உள்மடி உயிர்ம வரிசை, முதிராக் கருயின் உள்மடிப்புப் பருவத்தொடக்கத்தில் உருவாகும் உள்வரி முளையுயிர்ம வரிசை.
Hypobranchial
a. செவுளின் அடியில் அமைந்த.
Hypocaust
n. அடிநிலைவெப்பறை, உலை அல்லது வெப்பக்காற்று மூலம் சூடு சேகரித்து அளிக்கப் பண்டை ரோமாபுரியினர் பயன்படுத்திய நிலத்தளத்தின் அடியிலுள்ள பொள்ளலான இடம்.
Hypochondria
n. சூம்படைவுக் கோளாறு, மணவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட.
Hypochondriac
n. மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட.
Hypocristic
a. (இலக்.) செல்லப்பெயரின் இயல்புடைய.
Hypocrisy
n. பாசாங்கு, போலி நடிப்பு, படிற்றொழுக்கம்,
Hypocrite
n. வஞ்சனையாளர், கபட வேடதாரி.
Hypocritical
a. வஞ்சித்தொழுகிற, போலி நடிப்பினால் ஏய்க்கிற, பொய்யகமான.
Hypocycloid
n. உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம்.