English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grovelling
a. நிலத்தில் ஊர்கிற, தலை குனிந்துள்ள, கீழான, அடிமைத்தனமான, அஞ்சி அஞ்சி நடக்கிற.
Grow
v. வளர், வளர்ச்சியுரு, வளரச்செய், பேணி வளர், நிலைபெற்று வளர்ச்சியடை, வளர்ச்சியால் மூடு, கவிவுறச் செய், பயிரிடு, விளைவு, விளை, உண்டாகு, நீளு, பாவு, பெருகு, இயல்பாகப் பெருக்கமுறு, பெரிதாகு, முதிர்புறு, உயரமாகு, உயர்வுறு, ஆற்றல் மேம்பாடுறு, தர உயர்வுறு, விரைவு மிகுதியுறு, மிகுதியாகு, படிப்படியாக முன்னேறு, மலிவாகு, பொது நிகழ்வாகக் காணப்பெறு, எழு, முளை, முளைவிடு, காணப்பெறு, ஆகிச்சமைவுறு, மாறுபட்டு முன்னேற்றமடை, மாறி அமைவுறு, உருவாகு, உளத்தில் இடம்பெறு, உளத்தில் இடம்பெற்று வளர், உளத்தில் எழுந்து தோன்று.
Grower
n. வளரும் செடி, செடி வளர்ப்பவர், பயிர் வளர்ப்பவர், உழவர்.
Growing
a. உளர்கிற, மிகுகிற.
Growingly
adv. வரவர மிகுதியாக.
Growl
n. உறுமுதல், முறுமுறுப்பு, கோபத்தோடு, முறுமுறுத்தல், குறை முறையீட்டுக்குரல், (வினை) உறுமு, சீறிப்பேசு, குறையீடு செய்.
Growler
n. உறுமுபவர், முறுமுறுபவர், முனகுபவர், முணுமுணுக்கும் அகன்ற வாயுள்ள வட அமெரிக்க ஆற்று மீன் வகை, கடலில் மிதக்கும் சிறு பனிக்கட்டி.
Growlery
n. முனங்குதல், உறுமுதல், முறுமுறுத்தல், முறுமுறுப்பதற்கான இடம், தனிப்பட்ட இடம்.
Grown, v.grow
என்பதன் முடிவெச்சம்.
Growth
n. வளர்த்தி, வளர்ச்சி, முன்னேற்றம், மிகுதி, பயிர் விளைச்சல், விளைபொருள், நோயினால் உடலில் ஏற்படும் சதை வளர்ச்சி, வளர்ந்தது, வளர்வது.
Groyne
n. மரத்தாலான கடலரிப்புத் தடுப்பு அரண், (வினை) கடலரிப்புத் தடுப்புக்கான மர அரண் அமை.
Grub
n. பூச்சிகளின் முட்டைப்புழு, அறிவிலா ஊழியவேலை செய்பவர், இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர், ஒழுங்கற்றவர், தூய்மையற்றவர், குறுகிய நோக்கமும், தற்பெருமையுமுடையவர், மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து, உணவு, உண்டி, (வினை) தோண்டு, மேலீடாகக் கிளறு, நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி, தோண்டி யெடு, கிளறித் தேடு, ஓயாது உழை, துன்பப்பட்டு வேலைசெய், உணவளி, உணவு ஏற்பாடு செய்.
Grubber
n. கிளறுபவர், அகழந்து பறிப்பவர், தாளரி கருவி, களைக்கொட்டு.
Grubby
a. அழுக்கான, களிம்பான, ஒழுங்கற்ற, புழுநிரம்பிய, தூய்மையற்ற.
Grub-street
n. ஏழைக்கூலி எழுத்தாளர்களின் இருப்பிடம், கூலி எழுத்தாளர் குழு.ளூ
Grudge
n. காழ்ப்பு, பொல்லாப்பு வன்மம், கறுவுதல், மாற்சரியம், (வினை) கொடுக்கத்தயங்கு, தர விருப்பமில்லாமலிரு, கருமித்தனம்பண்ணு, இசைய மனமொப்பதிரு, மனவெறுப்புக் காட்டு.
Gruel
n. புற்கை, பாழ்ங்கூழ், நோயாளிக்கான நீராளக்கஞ்சி, பாற்கஞ்சி.
Gruesome
a. அருவருப்பான, கோரமான, அச்சமூட்டுகிற, கொடிய, வெறுப்புத்தரத்தக்க.
Gruff
a. வெடுவெடுப்பான, சீறிவிழுகிற, கண்டிப்பான, மிகச் சுருக்கமான, முரட்டுத்தனமான, பண்பாடற்ற, கரகரத்த ஒலியுடைய.