English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Down
						v. மூழ்கடி, மூழ்கடித்து மாளச்செய், நீரினுள் அமிழ்த்தி, மூச்சு முட்டவைத்துக் கொல்லு, நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி, அமிழ்வித்து, மூச்சுமுட்டடி இறக்கும்படி செய், வௌளம் வகையில் மேற்கவிந்து சென்றழி, நீரில் தோய்வி, குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்,மேற்கவிந்து மறை, பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
						
					 
						Down
						-1 n. தூவி, மெத்தை முதலியவகைளில் இட்டு நிரப்பப்படும் மேல்லிறகு, முகமீதுள்ள மென்பட்டுப் போன்ற குறுமயிர்த்துய், பழங்கள் மீதுள்ள மென்துய், பஞ்சுபோன்று மெத்தென்றிருக்கும் பொருள்.
						
					 
						Down
						-2 n. தேரி, மணல்திட்டு,மணற்கரை, மரங்களற்ற மேட்டு நிலம், மேட்டு நிலப்பரப்பு
						
					 
						Down
						-3 n. இறக்கம், தாழ்நிலம், பள்ளம், வாழ்வின் தாழ்வுக் காலம், போதாக்காலப் பகுதி, கீழே எறிதல், போடுதல் கீழே வைத்தல், கீழடக்கி வைத்தல், அமுக்குதல், (பெயரடை) கீழ் நோக்கிய, கீழ்நோக்கிச் செல்கிற, கீழ்நிலையடைகிற, மையத்திலிருந்து புறம்நோக்கிய, புறஞ்செல்கிற, தாழ்ந்த
						
					 
						Down, cast
						-2 n. கீழ்நோக்கிய எறிவு, (பெயரடை) வாட்டமுற்ற, முகந்தொங்கவிட்ட, கீழ்நோக்கிய.
						
					 
						Down;cast
						-1 n. உள்காற்றோட்டம், சுரங்கத்தினுட் செல்லும் காற்றொட்டம், உள்காற்றோட்ட வழி.
						
					 
						Down-and-out
						n. குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர், வாழ்க்கையில் தோல்வியுற்றவர், துணையற்றவர், (பெயரடை) வாழ்க்கை வளமிழந்த.
						
					 
						Down-and-outer
						n. குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர், வாழ்க்கை வளமிழந்தவர், ஏலாதவர், வறியர்.
						
					 
						Downbow
						n. நரப்பிசைக்கருவியில் குமிழ்நுனி மீதிருந்து நரம்புகள் மீதானஇயக்கம்.
						
					 
						Downcast-shaft
						n. சுரங்கத்தினுள் காற்றோட்டத்தைக் கொண்டுசெல்லும் வழி,.
						
					 
						Downcome
						n. வீழ்ச்சி, அழிவு, கடுமழை.
						
					 
						Downfall
						n. மழை முதலியவற்றின் பெரும் பொழிவு, வீழ்ச்சி வாழ்கைவளமுறிவு, அழிவு, தோலர்வி, தாழ்வு.
						
					 
						Downfallen
						a. அழிவுற்ற, வீழ்ச்சியடைந்த.
						
					 
						Down-haul
						n. கப்பலின் பாயினைக் கீழே இறக்குதற்குத் துணைசெய்யும் கயிறு.
						
					 
						Down-hearted
						a. உள்ளம் சாம்பிய, மனம் வாடிய.
						
					 
						Downhill
						-1 n. கீழ்நோக்கிய சரிவு, சாய்வு, இறக்கம் (பெயரடை) கீழ்நோக்கிச் சரிகிற, சரிவில் இறங்குகிற, சரிவான,. சாய்வான.
						
					 
						Downhill
						-2 adv. இறங்குதிசையில், சரிவில், இறக்கமாக.
						
					 
						Downing Street
						n. லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு, பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம், பிரிட்டிஷ் அரசாங்கம், பிரிட்டனின் நாளரசு.
						
					 
						Down-line
						n. தலைநகரிலிருந்து வௌதச்செல்லும் இருப்புப்பாதை.
						
					 
						Down-lying
						n. ஓய்வெடுத்துக்கொள்ளும் நேரம், பெண் கருவுற்றிருக்கும் நிலை, (பெயரடை) ஓய்வெடுத்துக்கொள்கிற, கருவுற்றிருக்கும் வேளைக்குரிய. (வினையடை) ஓய்வுகொள்ளும் நிலையில்,.