English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Usurpation
n. அடாவழிக் கைப்பற்றீடு, தகாமுறை உரிமைப்பறிப்பு.
Usurper
n. தகாமுறை அரசர், அடாவழி உரிமை கைப்பற்றுபவர்.
Usurping
a. தகாவழிப் பற்றிய, நெறிமீறி உரிமைகொள்கிற.
Usury
n. கடுவட்டி முறை, தகாவட்டி முறை.
Ut
-1 n. ஏழுசுரங்களுள் ஒன்றின் பழங்குறியீடு.
Ut
-2 adv. மேற்கண்டவாறு, கீழ்வருமாறு.
Utensil
n. தட்டுமுட்டுக்கலம், அடுக்களைப் பாத்திரம்.
Uterine
a. கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய.
Uteritis
n. கருப்பை அழற்சி.
Uti possidetis
n. போரில் கொண்டது கொள்ளும் நெறி முறைமை, கொள்ளையாகக் கொண்டதை உடைமையாகக் கொள்ள இசைவுதரும் கோட்பாடு.
Utilitarian
n. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய.
Utilitarianism
n. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை.
Utility
n. பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய.
Utilizable
a. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க.
Utilization
n. பயன்படுத்துதல்.
Utilize
v. பயன்படுத்திக்கொள்.
Utmost
n. இயலும் உச்ச அளவு, மிகவும் பெரிய அளவினதான.
Utopia
n. சர் தாமஸ் மோர், என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு, இலக்கியல் நாடு, இலக்கியல் அரசு, குறிக்கோள் நிலைச் சமுதாயம், கற்பனை உலகு, வாய் வேதாந்தம்.
Utopian
n. சர் தாமஸ் மோர் ஏட்டிற்குரிய தீவின் குடிமக்களுள் ஒருவர், செயல்முறைக்கொவ்வா உயர் கனவுநிலை அமைப்பார்வலர், இலக்கியல் ஆர்வக் கனவாளர், (பெ.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட.