English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Retrocession
n. பின்னியக்கம், பின் புடைபெயர்வு, ஆட்சிப்பரப்பின் மீட்டளிப்பு.
Retrocessive
a. ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்து விடுகிற, பின்னிடுகிற.
Retrochoir
n. பெரிய திருக்கோயில்களில் உயர் பலிபீடத்துக்குப் பின்னுள்ள பகுதி.
Retroflected, rretroflex, retroflexed
a. (உள்,தாவ) பின்புறமாக வளைந்த.
Retroflexion
n. பின்வளைவு.
Retrogradation
n. (வான்) விண்கோளப் பின்னிடைவுத் தோற்றம், விண்கோளம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
Retrograde
n. பிற்போக்கு மனப்பான்மை, சீர்கட்டுப் போனவர், (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட, பின்வாங்குகிற, நேர்மாறாகத் திருப்பப்பட்ட, (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற, கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற, (வினை) பின்னோக்கிச்செல், பின்னிடு, விலகிக்கொள், நலிவுறு, பழைய நிலையடை, (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று.
Retrogress
v. பின்னுக்குச் செல், பின்னோக்கிப் போ, தரங்கெடு, படிப்படியாகச் சீரழிவுறு.
Retrogression
n. பின்னோக்கிய செலவு, தலைகீழான இயக்கம், பிற்போக்கு, பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல், முன்னேற்றத்தடை, நலிவு, சீரழிவு, (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம், விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
Retroject
v. பின்னுக்கு எறி.
Retropulsion
n. (மரு) வௌதப்புற நோய் உட்புறத்துக்கு மாறுதல்.
Retrore
a. (வில) பின்னோக்கி அல்லது கீழிநோக்கி வளைந்த.
Retrospect
n. பின்நாடிய நோக்கு, பின்காட்சி, சென்ற கால நோக்கு, முன்னிகழ்வுகள் பற்றிய நினைவுக்காட்சி, முன்தொடர்புச் சுருக்கக்குறிப்பு.
Retrospection
n. மறித்துப் பார்த்தல், பழைய நிகழ்ச்சிகளை மனங்கொளல், முன்நிகழ்ச்சிச் சிந்தனையாழ்வு, முன்மரபுக் குறித்தல், முன்மரபு போற்றுகை.
Retrospective
a. பின்னோக்கிய, முற்கால நிகழ்வுக்குரிய, முற்காலம் நோக்கிச் செல்லுகிற,(சட்) சென்றகாலத்ததையும் அளாவிய, முற்காலத்துக்கும் பொருத்தமான, முன்மரபையும் பாதிக்கிற.
Retrosternal
a. மார்பெலும்புக்குப் பின்னாகவுள்ள.
Retrousse
a. மேல்நோக்கி வளைந்த, நுனி நிமிர்ந்த.
Retroversion
n. பின்னோக்கித் திரும்புதல், பின்னுக்கு விழுதல், இடம் பெயர்ந்து பின்செல்லுதல்.
Retrovert
v. கோளாறுற்ற கருப்பை வகையில் பின்னுக்குத் திரும்பு.
Rettery
n. மென்சணலின் ஈர்ம்பதமனை.