English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Piano
-1 n. (இசை.) மென்மையாக வாசிக்கப்பட வேண்டிய பாடற் பகுதி, (வினையடை.) மென்மையாக.
Piano
-2 n. இசைப்பெட்டி வகை, கின்னரப்பெட்டி.
Pianola
n. இயந்திர இயக்கத்தினால் இசைப்பெட்டி வாசிப்பதற்கான அமைவு வகை.
Piano-player
n. இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு, இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
Piaster, piastre
ஸ்பானிய வௌளி நாணய வகை, சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை.
Piazza
n. இத்தாலிய நகரத்தின் பொதுச்சதுக்கம் அல்லது அங்காடியிடம்.
Pibroch
n. ஒத்துவாத்தியத் திரிபுவகை.
Pica
n. ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப்படிவ வகை.
Picador
n. ஏறெதிரே ஈட்டியேந்திய இவுளி வீரன்.
Picamar
n. மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் கசப்பு எண்ணெய் வகை.
Picaresque
a. புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
Picaroon
n. போக்கிரி, திருடன், கடற்கொள்ளையாள், கொள்ளைக்கப்பல், (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று.
Piccalilli
n. காய்கறி ஊறுகாய்.
Piccaninny
n. சிறுகுழந்தை, நீகிரோவர் குழந்தை, (பெ.) சின்னஞ்சிறிய, குழந்தை இயலுடைய.
Piccolo
n. சிறு புல்லாங்குழல் வகை.
Pice
n. பைசா, செப்புக்காசு.
Pichiciago
n. தென் அமெரிக்காவில் சிலி நாட்டைச்சேர்ந்த வளை தோண்டும் இயல்புடைய சிறுவிலங்கு வகை.
Pick
n. குந்தாலி, குத்துகோடரி, பற்குச்சி, கூர்நுனிக்கருவி, பொறுக்குதல், தெரிந்தெடுத்தல், தெரிவு, ஆய்வு, ஒன்றன் மிகச்சிறந்த கூறு, (வினை.) குந்தாலியாற் கொத்து, கல்லு, குந்தாலியால் வெட்டித் துளைசெய், பல்குத்து, எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று, பழம்பறி, மலர்கொய், பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு, மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின், (பே-வ) சாப்பிடு, பொறுக்கு, தேர்ந்தெடு, ஆய்ந்தெடு, பிய்த்தெறி, பிரித்தெடு.
Pick-a-back
adv. சுமைபோலத் தோளிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டு.
Pickax, pickaxe
குந்தாலி, (வினை.) குந்தாலியால் நிலம் முதலியவற்றைக் கொத்து, குந்தாலியைக் கொண்டு வேலைசெய்.