English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Phantom
n. மாயம், பொய்த்தோற்றம், ஆவியுரு, பேயுருத்தோற்றம், புனைவுருத்தோற்றம், உள்ளீடற்ற உருத்தோற்றம், இல்பொருள் தோற்றம், பொருண்மையற்ற போலியுரு, போலித்தோற்றம்.
Pharaoh
n. பண்டைய எகிப்திய அரசர்களின் பொதுப் பட்டப்பெயர்.
Pharisee
n. கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர், ஆசாரக்கள்ளர், போலிப் புற ஆசாரக்காரர், மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர், போலிப் பகட்டர், பாசாங்குக்காரர்.
Pharmaceustics
n. மருந்தாக்க இயல்.
Pharmaceutical
a. மருந்து ஆக்கத்தொழிலுக்குரிய, மருந்து வழங்கீடு விற்பனை சார்நத.
Pharmaceutical manufacturers
மருந்து உருவாக்குநர், மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்துருவாக்கிககள், மருந்து தயாரிப்பாளர்
Pharmacist
n. மருந்துக்கடைக்காரர், மருந்தாக்க கவிஞர்.
Pharmacopoeia
n. வாகட நுல், மருத்துப்பொருள் தொகுதி.
Pharmacy
n. மருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை.
Pharmacy
மருந்தகம், மருந்தாக்ககம்
Pharos
n. கலங்கரை விளக்கம், கரைவிளக்கப் பந்தம்.
Pharyngocele
n. அடித்தொண்டை அழற்சி, முன்தொண்டை அடிப்புற அழற்சி.
Pharyngotomy
n. தொண்டையழற்சி அறுவை.
Phase
n. திங்களின் கலை, மதி வட்டத்தின் ஔதவிளக்கக்கூறு, கோள் ஔதக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.
Pheasant
n. நெடுவால் பகட்டு வண்ணக் கோழிவகை.
Phenacetin
n. காய்ச்சல் தடுக்கும் மருந்து.
Phenix
n. இறந்தெழும் பறவை, பெறலரும் பொருள்.
Phenology
n. உயிரிகள் ஆய்வியல்.
Phenomenal
a. குறிப்பிடத்தக்க, வியப்புக்குரிய, தனிச்சிறப்புக்குரிய, புலன்களால் உணரத்தக்க, தெரிந்துகொள்ளக்கூடிய.