English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Peppeer-corn
n. காய்ந்த மிளகு, பெருமதிப்பில்லாப் பொருள்.
Pepper
n. மிளகு, (வினை.) மிளகுப்பொடி தூவு, மிளகுகலந்துசெய், எறிபடைகளால் தாக்கு, கடுமையாகத் தண்டி.
Pepper-and-salt
n. கருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி, சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி.
Pepperbox, pepper-cster. Pepper-castor
n. மிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி.
Peppermint
n. வாசனைத் தைலம் தருஞ் செடிவகை, வில்லை, சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம்.
Pepper-pot
n. மிளகுப்பொடி தூவுகலம், இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை, ஜமெய்க்கா தீவில் வாழ்பவர்.
Peppery
a. மிளகாலான, மிளகுபோன்ற, மிளகு நிறைந்த, காரமான, எரிப்பான, கடுகடுப்பான, சிடுசிடுப்பான.
Pepsin
n. இரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
Peptic
a. செமிக்கச் செய்கிற, செமிப்பதற்கு உதிவியான.
Peptone
n. கரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
Per annum
adv. ஆண்டுதோறும், ஆண்டிற்கு.
Per caput, per capita
adv. தலைக்கு, ஒவ்வொருவருக்கு,.
Per contra
n. கணக்கேட்டில் எதிர்ப்புறம், (வினையடை.) கணக்கேட்டில் எதிர்புறத்தில், மறுபக்கமாக.
Per diem
adv. நாள் ஒன்றிற்கு.
Per mensem
adv. திங்களொன்றிற்கு, மாதத்திற்கு.
Per mille
adv. ஆயிரத்திற்கு, ஒவ்வோர் ஆயிரத்திற்கும்,
Per procurationem
adv. பகரநிலையாக, கையொப்பமிடு பவர் செயல்விளைவாக.
Per saltum
adv. இடையீடின்றி நேரடியாக, உடனடியாக.
Peradventure
n. உறுதியின்மை, ஊகநிலை, தற்செயல்நிகழ்வு, (வினையடை.) தற்செயலாக, ஒருவேளை.
Perai
n. பெருந்தீனி, உண்கிற அமெரிக்க நாட்டு நன்னீர் மீன்வகை.