English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Passover
n. இஸ்ரவேலர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா, யூதர் திருவிழாவின்போது கொன்று தின்னப்படும், ஆட்டுக்குட்டி, இயேசுநாதர்.
Passport
கடவுச் சீட்டு, கிள்ளாக்கு
Passport
n. கடவுச்சீட்டு, பயண இசைவுச்சீட்டு, நுழைவுரிமை தருஞ்செய்தி.
Password
n. அடையாளச் சொல், பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Past
n. இறந்த காலம், சென்ற காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சி, ஒருவரது கடந்த கால வாழ்க்கை, (பெ.) கழிந்த காலத்தைச் சேர்க்க, நடந்துபோன, கடந்துபோன, இப்போதுதான் கழிவாகிவிட்ட, முடிவுற்ற, (இலக்.) கால வகையில் சென்றுவிட்ட, (வினையடை.) அருகாகக்கடந்து, குறித்த காலவகையில் கடந்து, குறித்த இடவகையில் அப்பால், எல்லை வகையில் அப்பால்.
Paste
n. பிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு.
Pasteboard
n. தாள் அட்டை, (பெ.) தான் அட்டையாலான, நொய்தான, போலியான, சிறப்பற்ற.
Pastel
n. நீலச்சாயம் தருஞ்செடிவகை, செடிவகையிலிருந்து கிடைக்கும் நீலச்சாயம், வண்ணக்கோல்கள் செய்வதற்காகப் பசைநீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர்பசை, வண்ணக்கோலினால் தீட்டப்பட்ட படம்.
Pastern
n. குதிரையின் காற்குழைச்சு.
Pasteurism
n. அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவழ்ன் மூலம் நீர்வெறுப்புநோய் போன்றவை வராமல் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் முறை.
Pasteurize
v. பிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய், ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.
Pasticcio
n. கதம்பம், கூட்டுக்கலவை, இசைக்கலம்பகம், வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல், பல்வேறு படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்.
Pastiche
n. கதம்பம், வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல், வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம், தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
Pastil. pastille
n. நறுமணத் தூபர் சுருள், சிறு நறுமணத் தின்பண்டம், இனிப்புக்கலந்த மருந்து வில்லை,
Pastime
n. பொழுதுபோக்கு, விளையாட்டு, களியாட்டம், நேரப்போக்குமுறை.
Pastor
n. நல்லாயர், மேய்ப்பர், குருபோதகர், திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு, ஆன்மிக வழிகாட்டி, கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
Pastoral
n. நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம், முல்லைத்திணைப்பாட்டு, முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம், சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம், (பெ.) ஆயர்களைச் சார்ந்த, நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற, பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற, சமயகுரு சார்ந்த.
Pastorale
n. நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல், முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
Pastoralism
n. முல்லைத்திணைப் பண்பு, நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.