English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pre-contract
-1 n. முந்திய ஒப்பந்தம், முந்திய மனவுறுதி.
Pre-contract
-2 v. முன்னதாக ஒப்பந்தம் செய்துகொள், முன்கூட்டி மணவுறுதி செய்துகொள்.
Pre-cordial
a. (உள்.) நெஞ்சுப் பைக்கு முன்னுள்ள.
Pre-costal
a. (உள்.) விலாவெலும்புகளுக்கு முன்னுள்ள.
Precursor
n. முன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
Precursory
a. முன்குறிப்புரையான, பீடிகையான, வாயில் செய்கிற, புதுமுகமான, முன்னோடித் தூதனாக அமைந்த.
Predacious
a. விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற, பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய, சூறையாடுகிற, கொள்ளையடிக்கும் பழக்கமுடைய.
Predate
v. முன் தேதியிடு, மெய்யான தேதிக்கு முன் தேதிகுறி.
Predatory
a. கொள்ளைசார்ந்த, கொள்ளையடிக்கிற, சூறையாடும் பழக்கமுள்ள, விலங்குவகையில் பிற விலங்குகளைக் கொன்றுதின்னுகிற.
Predecease
n. முற்சாவு, (வினை.) முன்மாள்வுறு.
Predecessor
n. முற்பதவியாளர், பதவியில் முன்னிருந்தவர், முந்தியது, முன்னது, முற்போந்த ஒன்று, மூதாதை.
Predefine
v. முன்னதாகவே வரையறு, முன்பே அறுதிசெய், முந்திக் குறிப்பிடு.
Predella
n. திருக்கோயில் வழிபாட்டு, மேடையின் முகட்டுத் தளம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடக்குழி, வழிபாட்டு மேடைப்படி முகப்போவியம், வழிபாட்டு மேடைப்படி முகப்புச் செதுக்குரு, வழிபாட்டுமேடைப் பின்புற மாட ஓவியம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடச் செதுக்குரு, வழிபாட்டு மேடை அடிப்புறத் தனிக்கட்ட ஓவியம்.
Predestinarian
n. ஊழ் முன்னறுதிப்பாட்டில் நம்பிக்கையுடையவர், (பெ.) ஊழ் முன்னறுதிப்பாட்டுக் கோட்பாடு சார்ந்த, விதியின் முன்னறுதிப்பாடு சார்ந்த.
Predestinate
v. முன்வகுத்தமை, கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு, முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Predestination
n. முன்வகுத்தமைவு, ஊழ், மாறா நியதி, வீடுபேற்றிற்கும் இறவா வாழ்விற்கும் எனக் கடவுளால் சில் முன்னறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற கருத்து, நடப்பது யாவுமே கடவுளால் முன்னறுதி செய்யப்பட்டவை என்ற கருத்து.
Predestine
v. முன்முடிவு செய்துவை, முன்னரே அறுதிசெய், ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை, கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை, வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு, நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
Predetermination
n. முன்முடிவு.
Predetermine
v. முன்னரே தீர்மானி, முன்னறுதிசெய், முன்னரே தீர்ப்புமுடிவு செய்துவை, முன்னரே விதி, ஊழ்வலி போன்று நியமித்துவை.
Predial
n. நில அடிமையாள், நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமை, (பெ.) நிலஞ் சார்ந்த, பண்ணை சார்ந்த, நாட்டுப்புறமான, நாட்டுப்புறஞ் சார்ந்த, வேளாண்மைக்குரிய, அடிமைகள் வகையில் நிலத்தோடு இணைக்கப்பட்ட.