English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maximum
n. பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
Maximus
a. பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.
May
-1 n. ஆங்கில ஆண்டின் ஐந்தாவது மாதம், இளமை, மலர்ச்சிப் பருவம்.
May
-2 n. முட்செடி வகை, முட்செடி வகையின் மலர்.
May
-3 n. (செய்) கன்னிப்பெண்.
May
-4 v. கூடும், கூடியது, ஒருவேளை நடைபெறலாம், ஆகலாம், இசைவு உண்டு, இணக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Mayan
a. நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த.
Maybe
n. ஆகக்கூடிய ஒன்று,. நிகழக்கூடிய ஒன்று, (வினையடை) ஒருவேளை, ஒருக்கால்.
Mayfair
n. லண்டன் நகரத்தின் செல்வவளமிக்க மேற்குப்பகுதி.
Mayfly
n. விரைந்தழியும் பூச்சிவகை, ஈசல்.
Mayhem
n. (வர) தற்காப்பற்றவராக ஒருவரை முடமாக்குங் குற்றம்.
Mayhoralty
n. மாநகர்த் தலைவர் பதவி, மாநகர்த் தலைவரின் பதவிக்காலம்.
Maying
n. மே திருநாள் கொண்டாடுதல், முட்செடி வகையின் மலர் பறித்தல்.
Mayonnaise
n. முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து, சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை.
Mayor
n. மாநகர் முதல்வர், பெரு நகராண்மைக் கழகத் தலைவர்.
Mayoral
a. மாநகர்த் தலைவருக்குரிய, மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த.
Mayoress
n. மாநகர்த் தலைவரின் மனைவி, மாநகர்த் தலைவி, மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
Maypole
n. மேவிழாக் கம்பம், மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.