English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Matter
n. பருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு.
Matter-of-fact
a. கற்பனையற்ற, நடைமுறை மெய்ம்மையான, கவர்ச்சிக்கூறற்ற.
Mattery
a. சீழ்கொண்ட, சீழ்வடிகிற.
Matting
n. பாய்முடைவு, சிக்குறுகை, சடைப்பு, பாய்விரிப்பு, பாய் பரப்பீடு, பாய்முடைபொருள், பொதிவு, கவிவு.
Mattins
n. ஆங்கிலநாட்டுத் திருக்கோயிலின் காலை வழிபாடு.
Mattle
n. எழுச்சிநிலை, இயல்பான ஊக்கார்வம், கிளர்ச்சி, உள்ளுரம், மனவுறுதி.
Mattock
n. மண்கொத்தி, மண்ணைக் கொந்துவதற்கான நீண்டகன்ற அலகுடைய கருவிவகை.
Mattoid
n. அறிவுக்கிறுக்கர், அறிவுமூடர்.
Mattress
n. வற்றிண்டு, வைக்கோல்-மயிர்-நார் முதலியன உள்ளிட்டுத்திணித்த முரட்டுமெத்தை.
Maturate
v. (மரு) கொப்பளம் பழப்புறு, சீக்கனிந்து முனைப்புறு, கொப்புளம் பழுக்கவை.
Maturation
n. சீக்கட்டுப் பழுப்பு, கொப்புளம் பழுத்தல், சீக்கட்டு பழக்கவைத்தல், பழம் பழுத்தல், முதிர்கை, வளர்ச்சி.
Mature
a. முதிர்ந்த, பழுத்த, கன்றிய, பருவமுற்ற, இயல்பாக முழு வளர்ச்சியுற்ற, முழு வளர்ச்சியடைந்த உடலுள் ஆற்றல்களையுடைய, பணமுறி வகையில் தவணை முற்றிய, கொடுக்கும் முதலியவை வகையில் நிறைவுபடுத்து, பணமுறி வகையில் தவணைமுற்று, பணமாக மாற்றும பருவமெய்து.
Maturity
n. நிறை முதிர்ச்சி, பருவ நிறைவு, குதிர்வு, பணமுறி தவணைமுதிர்வு.
Matutinal
a. காலைவேளைக்குரிய, காலைநேரத்தில் நிகழ்கிற, முந்திய, முற்பட்ட.
Maud
n. ஸ்காத்லாந்து ஆட்டிடையரின் கோடிட்ட தவிட்டுநிறக் கம்பளச் சால்வை, பயணத்துக்கான தடித்த தவிட்டுநிறக் கம்பள விரிப்பு.
Maudlin
n. வெறிநேரப் பசப்புணர்ச்சி, அருவருப்பான வெற்றுச் சிணுங்கல், (பெயரடை) களிமயக்குற்ற, பச்சைக் குழந்தைத்தனமான, வெறிநேரப் பசப்புச் சிணுங்கல் உடைய, அருவருப்பாக வெற்றுப் பசப்புணர்ச்சி காட்டுகிற.
Maul
n. சம்மட்டிக்கட்டை, (வினை) அடித்து நொறுக்கு கவனமின்றி அல்லது நயமின்றிக் கையாளு, கண்டித்துப் பழுதுபடுத்து.
Maulstick
n. ஓவியம் வரைபவர்கள் இடதுகைத் தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.
Maund
n. மணங்கு, எட்டு வீசைகொண்ட நிறை.
Maunder
v. ஊன்றிய கருத்தின்றி இயங்கு, வேறு கவனத்துடன் செயலாற்று, பொருத்தமின்றி வேறு நினைப்பாகப்பேசு.