English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Idiom
n. தனிமரபு, மரபுக்கூறு, மொழிமரபுத்திறம், நாட்டுமரபுத்திறம், மக்கள் மரபுமொழி, நாட்டுமரவுமொழி, மொழியின் வகை திரிபு, பேச்சு வகைமரபு, மரபுத்தொடர், மரபுவழக்கு.
Idiomatic
a. மொழியின் தனிச் சிறப்பியல்பான, மொழிமரபுக்குரிய, மொழிவழக்குக்கு ஒத்த.
Idiopathy
n. தனிமனிதரின் தனிச்சிறப்புக்குரிய அனுபவம், (மரு) வேறொரு நோயின் வழிநிலையாய் அமையாமல் முதல் நிலையாகத் தோன்றும் நோய்.
Idioplasm
n. (உயி) மரபுவழிச் சிறப்பியல்பினை அறுதியிடும் ஊன்மக்கூறு.
Idiosyncrasy
n. தனிமனப்போக்கு, தனிச்சிறப்புக்குரிய பண்பு, தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை, தனிமுரண்பாடு, பொதுமீறிய தனியியல்பு, (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Idiot
n. மட்டி, முழுமூடன், ஒன்றுக்கும் உதவாதவன், முழுமகன் பேதை.
Idiotic
a. மட்டிக்குரிய, மடமைவாய்ந்த.
Idle
a. சோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
Idleness, idlesse
சோம்பல்.
Idler
n. சோம்பன், சோம்பேறி, காப்பு ஆழி, இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம், இயக்க இடையாழி, திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
Ido
n. செயற்கை உலகப்பொதுமொழி வகை.
Idol
n. வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம், பொய்த்தெய்வம், போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள், மாயநம்பிக்கை, போலிக்கற்பனை, (அள) போலிமருட்சி, தப்பெண்ணம், பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு, ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Idolater
n. உருவ வழிபாட்டினர், ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர், ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர்.
Idolatry
n. உருவ வழிபாடு, மீதூரும் அன்பு, ஆர்வப் போற்றரவு.
Idolize
v. மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு, வழிபாடடுப் பொருளாக்கு, மட்டுமீறிய அன்புசெலுத்து, பெரிதும்போற்றி வழிபடு, உருவவழிபாட்டினை மேற்கொள்.
Idolum
n. அகத்தில் தோன்றும் தோற்றம், எண்ணவடிவம், (அள) பிழைபடு வாத வகை, வாதக்கோளாறு.
Idylidyll
n. முல்லைப்பாட்டு, ஆயர்வாழ்வுபற்றிய சிறு காப்பியம், எளிய நாட்டுப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டிப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டுப்புற வாழ்க்கை நிகழ்ச்சி, வனப்புமிக்க சொல்லோவியம், எளிய வாழ்க்கைச் சித்திரம்.
Iertia
n. (இய) சடத்துவம், கிளர்ச்சியின்மை., மடிமை, செறிவுமிக்க சோம்பல்.
If
n. மயக்கதயக்கநிலை, ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு, கற்பனைப்பாவனை நிலை, ஆமாயின், என்ற நிலையில் என ஆனால், என நிகழ்ந்தால், என்று வைத்துக்கொண்டால்.
Igloo
n. எஸ்கிமோக்களின் கும்மட்ட வடிவான குடிசை.