English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Interjaculatory
a. தனிநிலையில் சுழறப்பெற்ற, திடுமென இடையிட்டுரைக்கின்ற.
Interject
v. இடையீடாகப்பேசு, குறுக்கிட்டுரை, திடுமென இடைமறித்துரை, தனிநிலையாகக் கழறு.
Interjection
n. திடீர் உரை, வியப்புரை, வியப்பிடைச் சொல்.
Interknit
v. இணைத்துப்பின்னு.
Interlace
v. இடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
Interlap
v. ஒன்றையொன்று மேற்கவிந்திரு.
Interlard
v. இடையிடையே கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
Interleaf,
நுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்,.
Interleave,
வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
Interline
v. வரியிடையே சொற்களைச்சேர், இடைவரி சேர்.
Interlinear
a. வரிகளுக்கிடையே எழுதப்பட்ட, இடைவரியாக அச்சடிக்கப்பட்ட.
Interlingua
n. ஐரோப்பிய மொழிகளில் உள்ள லத்தீன அடிப்படையாக அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட அனைத்துலக மொழி.
Interlink
v. கொளுவி, இணை, இடையிணைப்புச்செய்.
Interlobular
a. இரு பிரிவுகளுக்கிடையேயுள்ள.
Interlock.
v. ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு, பொருந்த இணைவுறு, பிணைப்புறு, இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி.
Interlocution
n. உரையாடல், வாதம்.
Interlocutor
n. உரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர், நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர், (சட்) தற்காலிக முன்னுத்தரவு.
Interlocutory
a. நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட.
Interloper
n. தலையிடுபவர், தன் ஆதாயம் கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை கொடுப்பவர், (வர) உரிமையற்ற வணிகர்.
Interlude
n. இடைக்காட்சி, முற்காலத் தொடர்நாடகங்களின் இடைப்பட்ட சிறு நாடகக்காட்சி, முற்பட்டகால நாடக வகை, நாடகக் காட்சிகளிடையேயுள்ள இடைவேளை, இடைவேளை நிகழ்ச்சி, இடைமாற்று நிகழ்ச்சி, இடைக்காட்சி இசை, (இசை) பாட்டிடைக் கருவி இசைப்பு.