English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Fly-past
						n. பறந்து செல்லும்போது குறிப்பிட்ட ஆள் அல்லது இடங்கடந்து செய்யப்படும் வணக்கமுறை.
						
					 
						Foal
						n. குதிரைக்குட்டி, கழுதைக்குட்டி, (வினை) குட்டியிடு, ஈனு.
						
					 
						Foam
						n. நுரை, பொங்கு குமிழ்த்திரள், நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ், வாய்நுரை, மதுவின் நொதி, வியர்வை ஆவிநுரை, கடல் நுரை, (செய்.) கடல், (வினை) நுரைக்கச்செய், நுரைபொங்கு, நுரையால் நிரப்புவி, நுரைநுரையாகப் பொங்கு, வாயில் நுரைதள்ளு, அலைநீர்மோதி நுரைத்தெழு, நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
						
					 
						Foam pillow
						நுரையணை, நுரைத் தலையணை
						
					 
						Foamy
						a. நுரை படிந்த, நுரைத்த, நுரையுள்ள.
						
					 
						Fob
						-1 n. சட்டையிலுள்ள கடிகாரப்பை, இடுப்பருகில் உள்ள உட்பை, சட்டைக் கடிகாரச்சங்கிலி, (வினை) கடிகாரப்பையில் வை, உட்பையில் இடு.
						
					 
						Fob
						-2 n. சூழ்ச்சிப்பொறி, (வினை) ஏமாற்று, பொறியில் வீழ்த்து, மோசடி செய், மோசமான சரக்கை மேல்சுமத்தி ஏய், மோசமான சரக்கைக் கொடுத்து  ஏமாற்றி விடு.
						
					 
						Focal
						a. குவிமையத்தைச் சார்ந்த, குவிமையத்திலுள்ள, குவிமையத்திள் கூடுகிற, ஔதக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற.
						
					 
						Focalize
						v. குவமையத்திற் சென்றிணையும் படி செய், ஔதக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
						
					 
						Focal-plane
						n. குவிமையத்துக்குரிய தளம்.
						
					 
						Focks
						n. pl. சுவர்த்தாளுக்கான கம்பளித் துணிச்சிதைவுகள், (வேதி.) பொருளின் தளர்த்தியான இலேசுப் படிகத்திரள்.
						
					 
						Focus
						n. குவிமையம், ஔதமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌதவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம்,  (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.
						
					 
						Focusing
						a. குவிமையப்படுத்த உதவுகிற.
						
					 
						Fodder
						n. தீவனம், கால் நடைத் தீனி, விலங்குணவு, (வினை) தீவனம்கொடு.
						
					 
						Foe
						n. எதிரி, பகைவர், தீங்கு நினைப்பவர், எதிர்ப்பவர், போரில் எதிராளி.
						
					 
						Foeman
						n. போரில் எதிரி, பகைவர்.
						
					 
						Foeticide, feticide
						கரு அழிப்பு, கருச்சிதைவு.
						
					 
						Foetus
						n. முதிர் கரு, முட்டையின் முதிர் கருமுனை.
						
					 
						Fog
						-1 n. மூடுபனி,. தௌதவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்
						
					 
						Fog
						-2 n. பின்விளைவுப் பயிர், அறுவடையான பிறகு வயலில் விளையும் புல், குளிர் காலத்தில் வளரவிடப்படும் நீண்ட புல் வகை, (வினை) அறுவடையான பிறகு வயலிற் புல் வளரவிடு, கால்நடைகளைப் பின்விளைபுல் மேயவிடு.