English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Flout
						n. ஏளனம், இகழ்ச்சி, பழிப்புரை, அவமதிப்புச்செயல், (வினை) ஏளனம் செய், இகழ்ந்துரை, பழி, ஏளனமாகக் கருது.
						
					 
						Flow
						-1 n. ஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகு
						
					 
						Flow
						-2 n. சேற்று நிலம், சதுப்புநிலம்.
						
					 
						Flower
						n. மலர், மலர்ச்சிநிலை, பூஞ்செடி, மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி, வாழ்வின் கட்டிளம்பருவம், மலர்ச்சிப்பருவம், இனத்திற் சிறந்தது, தனிச்சிறப்புடையவர், தனிச் சிறப்புடையது, மிகச்சிறந்த கூறு, உயிர்ச்சத்து, நிறைவளத்தின் திருவுரு, பொங்கல் சின்னம், சொல்லணி, நடையணி, (வினை) மலர்களைத் தோற்றுவி, அலர்வுறு, மலர்ச்சியுறு, வனப்புடன் விளங்கு,  தோட்டச்செடி பூக்கவிடு, செடியில் மலர் தோன்றச்செய், பூக்கும் படிபயிற்று, பூவேலை செய், மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
						
					 
						Flowerage
						n. மலர்கள், மலரும் பருவம், மலர்ச்சியுறும் நிலை.
						
					 
						Flower-bed
						n. தோட்ட மலர்ப்பாத்தி.
						
					 
						Flowered
						a. பூக்களின் உருவங்களால் ஒப்பனை செய்யப்பட்ட.
						
					 
						Flowerer
						n. பூக்குஞ் செடி, மலர்ச்செடி, பூத்தையல் வேலை செய்பவர்.
						
					 
						Flower-head
						n. காம்பில்லாத சிறுமலர்கள் மையத்தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூங்கொத்து.
						
					 
						Flower-pot
						n. பூத்தொட்டி, செடிவைத்து வளர்க்கப்படும் கலம்.
						
					 
						Flowers
						n. pl. (வேதி.) ஆவியுறை பதங்கமான தூள், புளிப்பேறுவதனால் உண்டாகும் நுரை, சொல்லணி, நடையணி.
						
					 
						Flower-show
						n. மலர்க்காட்சி.
						
					 
						Flowery
						a. மலர்கள் நிறைந்த, மலர்களால் ஒப்பனை செய்யப்பட்ட, அழகொப்பனை வாய்ந்த சொல்நயமிக்க, புகழ்ச்சி நயமிக்க, அணிகள் மலிந்த, அணிநயங்கனிந்த.
						
					 
						Flowing
						a. நீர்மத்தைப்போல ஒழுகிச்செல்கிற, இடையறாத தடையின்றிச் செல்கிற, ஆற்றொழுக்கான,ஊற்றெடுக்கிற, பொங்குகிற, மடிப்புக்களாகத் தொங்குகிற, அலைஅலையாய் விழுகிற.
						
					 
						Flown, pa, p. fly
						என்பதன் முடிவெச்சம்.
						
					 
						Flowsheet
						n. தொழிற் செயல்முறை வரலாறு காட்டும் வரை வளைவு விளக்கப்படம்.
						
					 
						Fluctuate
						v. நிலையற்றிரு, விழு, ஏறியிரங்கு, அலை அலையாக எழுந்து தளர்வுறு, மாறுபடு, ஊசலாடு, தடுமாறு.
						
					 
						Fluctuation
						n. ஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல்.