English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Divers
						a. சில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில.
						
					 
						Diverse
						a. தம்முள் மாறுபட்ட தன்மையுடைய, பல்வேறு வகைப்பட்ட.
						
					 
						Diversely
						adv. பல்வேறு வழிகளில், வெவ்வேறான வகையில்.
						
					 
						Diversify
						v. பல்வகைப்படுத்து, ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையதாக்கு.
						
					 
						Diversion
						n. வேறுவழிச் செலுத்துதல், கருத்துத் திருப்பம்., மாற்றுக்கவர்ச்சி, பொழுதுபோக்கு, விளையாட்டு, வேடிக்கை, போக்குமாற்றம், திசைமாற்றம்,கவனத்தை வேறுவழியில் திருப்புதல், போக்குக் காட்டி ஏய்ப்பு, மாறாட்டச் சூழ்ச்சி, பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி, மாற்றுவளை நெறி.
						
					 
						Diversionist
						n. ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்படிக் கோட்பாட்டிலிருந்து மாறுபடும் பொதுவுடைமையாளர்.
						
					 
						Diversity
						n. ஒத்தியையாமை, மாறுபாடு, வேற்றுமை, பல்வகைமை.
						
					 
						Divert
						v. வேறுவழியிற் செலுத்து, போக்குமாற்று, நெறிமாற்று, திசைமாற்று, கவனத்தை வேறு வழியில் திருப்பு, கருத்தாழ்வு தளர்த்து, மனச்செறிவு மாற்று, போக்குக் காட்டு, பாராக்குக்காட்டு, பொழுதுபோக்காக மகிழச்செய்.
						
					 
						Divertissement
						n. நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி,
						
					 
						Dives
						n. பெருஞ்செல்வர், பணக்காரர், பகட்டு வாழ்வு வாழ்பவர்,
						
					 
						Divest
						v. ஆடையகற்று, களை, உரி, நீக்கு.
						
					 
						Divide
						-1 n. நீர்ப்படுகை, இடைவரம்பு.
						
					 
						Divide
						-2 v. பிரிவுறு, பிரிவினைக்கு இடங்கொடு, பிளவுறு, கூறுபடு, வகைப்படு, வேறுபடு,பகுதிகளாகப் பிரி, பிரித்து வரம்புகோலு பகு இருபாகமாகப் பிள, கூறுபடுத்து, வகைப்படுத்து, வகுத்துணர், வேறுபரத்திக் காண், துண்டுபடுத்து, வேறுபடுத்து, வேறுபடுத்திக் காட்டு,  முரண்பாடு உண
						
					 
						Dividend
						n. வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
						
					 
						Dividend-warrant
						n. ஆதாயப்பங்கு பெறுதற்குரிய உரிமைச் சான்றுச் சீட்டு.
						
					 
						Divider
						n. பிரிப்பவர், பிரிப்பது, பங்கீட்டாளர், வகுப்பது, கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
						
					 
						DivI-divI
						n. சுமிக்கிக்காய்,. தோல்பதனிடுவதற்கும் சாயமிடுவதற்கும பயன்படும் கொன்றறைக் குடும்பச் செடியின் வளைந்த காய்நெற்று, சுமிக்கி மரம்.
						
					 
						Dividual
						a. பகுக்கக்கூடிய, பிரிக்கக்கூடிய.
						
					 
						Divination
						n. குறிகூறல், முன்னுணர்தல் மறைவுணர்தல், வருவது கூறுதல், நல்லுகம்.
						
					 
						Divinator
						n. நமித்திகன், யூகி, குறிகூறுபவன், வருவதுரைப்போன்,