English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dolly
-3 n. சலவைத்தொட்டியைக் கிளறுவதற்கு வழங்கப்படும் துடுப்பு, கனிப்பொருள் கருப்பாறை அலம்ப உதவும் கருவி, சுரங்க ஆதாரக்கம்பம் அடித்திருக்கும் பொறி, இருப்புத்தொளை செய்யுந் தொளைக்கருவி, மெருகிடும் கருவி, கலம், திருகு முனையின் பிடி, சக்கரங்களின் மீது உருளும் தட்ட
Dolly varden
n. பெண்களுக்குரிய பின்னல் வேலைப்பாடுடைய மெல்லிய துணிவகை, ஒருபுறமாகக் கீழே வளைக்கப்பட்டுப் பூவேலை ஒப்பனை செய்யப்பட்ட பெரிய குல்லாய் வகை.
Dolly-shop
n. கடல்துறை சார்ந்த பொருட் கிடங்கு, அடகு கொள்வினை கொடுப்புவினைக் கடை.
Dolly-tub
n. சலவைத்தொட்டி, கனிப்பொருள் கருப்பாறையின் கழுவுதொட்டி.
Dolman
n. சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை, பெண்ணின் மேலங்கி,.
Dolmen
n. கல்மேடை, செதுக்கப்படாத செங்குத்தான இரு கல்லும் அவற்றின் மீதுள்ள தட்டையான கல்லும் கொண்ட வரலாற்றுக்கு முந்திய காலக் கல்லறைப்படிவம்,
Dolose
a. குற்ற நோக்கங்கொண்ட, மனமார ஏமாற்றும் எண்ணங்கொண்ட.
Dolour
n. துன்பம், துயரம், வேதனை, தூக்கம், கடுந்துயர்.
Dolourous
a. துன்பமிக்க, துயரார்டந்த, வேதனை குறித்த, வருத்தஞ் செய்கிற,
Dolphin
n. கடற்பன்றி, திமிங்கில இனம் சார்ந்த எட்டு அல்லது பத்து அடி நீளமுள்ள அலகு போன்ற நீண்ட முன்னுறுப்பிடைய கடல் விலங்கு வகை, மீன்வகை.
Doltish
a. மடத்தனமான, அறிவற்ற.
Dom
n. மேதகை, போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
Domain
n. ஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
Dome
n. கவிகைமாடம், தூங்கானை மாடம், கவிகைமாடத்தூபி, மாடக்கோயில், வான்மோடு, காமரக்கவிகை, மலையின் வளைமுகட்டுச்சி, கவிகை உருவுடைய பொருள், மண்டை, இயந்திரக் கவிகைமூடி, உந்து வண்டி இயந்திர மேலுறை, வெப்பாலையின் உட்கவிகை, நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு, பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி,.(வினை) கவிகையுருவாயமை, கவிகை வடிவாக்கு, கவிகையை இணைத்தகவு.
Domed
a..குவிமாடமுள்ள, குவிமாடம் கொண்ட.
Domesday, Domesday Book
n. இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கி,பி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம், நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு,
Domestic
n. வீட்டு வேலைக்காரர், (பெயரடை) வீட்டுக்குரிய, குடும்பத்தைச் சார்ந்த, உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய, மனைப்பழக்கமுடைய, பழகிய,. மிகுதியும் இல்லுறைவான, மனையை விட்டகலாத, வீட்டாட்வமிக்க, குடும்பப்பற்று மிகுதியான, பொதுவல்லாத, தனி ஒதுக்கமான, தனிமுறையான, தாயகத்துக்குரிய, தாய்நிலத்துக்குரிய, உள்நாட்டுக்குரிய, அயல்நாடு சாராத, உள்நாட்டிற் செய்யப்பட்ட, சுதேசியான.
Domesticate
v. வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய், குடுமபப்பற்று உண்டுபண்ணு, நாகரிகப்படுத்து, மூர்க்கத்தன்மை குறை, வசப்படுத்து,. மனைப்பண்பூட்டு, வீட்டுச் சூழலில் பழக்கு., பயிற்றுவி, நாட்டுச் சூழலுடன் இயைவி, தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
Domesticated, a.
பழக்கப்பட்ட, பயிற்றபட்ட, மூர்க்கத்தன்மை குறைந்த.