English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Counter-poison
n. நச்சுமாற்று, நஞ்சு முறிவு.
Counter-pressure
n. எதிர் அழுத்தம்.
Counter-proof
n. புதிதாக அச்சிட்ட படியின் தலைகீழான எதிரழுத்தப்படி.
Counter-Reformation
n. (வர.) எதிர்ச் சீர் திருத்த இயக்கம், 'புராடஸ்டண்டு' சமயத்தின் சீர்திருத்தப்புரட்சிக் கெதிராகக் கத்தோலிக்க சமயத்துக்குள் எழுந்த சீர்திருத்த இயக்கம்.
Counter-revolution
n. புரட்சிக்கு எதிரான மறுபுரட்சி, முதல் புரட்சியின் விளைவுகளுக்கு எதிராகச் செயல்படும் அடுத்த புரட்சி.
Counter-roll
n. எதிர்ப் பதிவேடு, மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு.
Counter-round
n. சுற்றிப் பார்வையிடும் கண்காணிப்பாளர் குழு.
Counter-salient
a. (கட்.) எதிர்த்திசைகளில் கோணம போன்று முனைப்பாகவுள்ள.
Counter-sapproach
n. முற்றுகை இடுபவர்களைத் தடை செய்வதற்காக அரண்காப்பாளர்கள் அரணின் வௌதப்புறத்தில் அமைக்கும் கட்டுமானம்.
Counterscarp
n. முற்றுகையாளர் பக்கமுள்ள அகழியின் புறக்கரை.
Counter-security
n. மறுபிணை, பிணை ஆளாக உள்ளவருக்குக் கொடுக்கப்பட்ட பிணை.
Counter-sense
n. திரிபொருள், உண்மைப் பொருளுக்கு எதிராக உள்ள விளக்கப் பொருள்.
Countershaft
n. இயந்திரசாலையில் தலைமையான சுழல் அச்சினால் ஓட்டப்படும் இடைச்சுழல் அச்சு.
Countersign
n. காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல், ஆள் அடையாளம் காட்டும் குறி, (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு, உறுதி செய், உறுதிக் கையொப்பமிடு.
Counter-signal
n. பதில் சைகை.
Counter-signature
n. மேற் கையொப்பம், எழுத்திற்கு உறுதியளிக்கும் முறையில் இடப்படும் கையொப்பம்.
Countersink
v. திருகாணித்தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்.
Counter-stand
n. எதிர்ப்பு, தடை.
Counter-statement
n. எதிர் அறிக்கை, பதில் அறிவிப்பு.
Counter-tally
n. எதிர்கணிப்புக் குறி, கணிப்புக்குறி சரிபார்க்க உதவும் மறு குறி.