English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Assyriologist
n. பண்டை அசீரிய இனப்பழமை ஆய்வாளர், பணடை அசீரிய மொழி ஆராய்ச்சியாளர்.
Assyriology
n. பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
Astare
adv. உறுத்துநோக்கிய நிலையில், திடுமென.
Astatic
a. நிலையற்ற, நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய.
Aster
n. சாமந்தியினச்செடி.
Asteria
n. மின்மணி, வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
Asterid
n. விண்மீன் வடிவமீன்வகை.
Asterisk
n. விண்மின் குறி, (வினை.) விண்மீன் குறியீடு.
Asterism
n. நாண்மீன், விண்மீன் குழு, மூவிண்மீன் குறி(***), வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம், மின்நிறம்.
Astern
adv. (கப்.) பின்புறமாக.
Asteroid
n. குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று, வாணவேடிக்கை, (பெ.) விண்மீன் வடிவான.
Asteroidal
a. விண்மீன் வடிவான.
Asthenia
n. தளர்ச்சி, சோகை.
Asthenic
n. வாடிய உடலுடையவர், (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய.
Asthma
n. காசம், ஈளை, மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்.
Asthmatic, asthmatical
a. காசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட.
Asthore
n. பொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
Astigmatic
a. காட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய, காட்சி முனைப்பமைதிக் கேடுடைய.
Astigmatism
n. உருட்சிப்பிழை, கண்பார்வையின் முனைப்பமைதிக்கேடு, கண்ணாடிச் சில்லின் ஔதமுனைப்பமைதிக்குறைபாடு.
Astir
adv. இயங்கும் நிலையில், படுக்கைவிட்டெழுந்து, உயிர்ப்புடன், துடிப்புடன்.