English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Toe-nail
n. காலுகிர், கால்விரல் நகம், பலகைமூலைச் சாய் வாணி.
To-fall
n. கடைக்கூறு, கடைப்போது.
Toffee, toffy
இனிப்புப்பண்ட வகை.
Toft
n. பண்ணை வீடு, பழம்பண்ணை வீட்டுப்புறம், முன்பு பண்ணைவீடு இருந்த இடம்.
Toga
n. செஞ்சீரங்கி, பண்டை ரோமர் முழுநீள அங்கி, ரோம் நகராண்மை உரிமை அடையாள அங்கி, ரோம்நகர்ப் பணிமுறை அங்கி.
Together
adv. ஒன்றாய், ஒருங்கே, ஒருசேர, ஒரே நேரத்தில், ஒன்றுடனொன்றாய், ஒன்றுசேர்ந்து, ஒன்றவித்து, ஒன்று சேர்ந்து, கூடி, ஒரே தொடர்பாக.
Togger
n. பந்தயவினைப் படகு உகைப்பு.
Toggle
n. கால்மூட்டுச் சில்லுகளில் ஒன்று, (கப்) கயிற நிலையிறுக்கி, விசைச் செங்கோணியக்க அமைவு, (வினை) செங்கோணியக்க அமைவு இணை, இறுக்கிப்பிடி.
Toggle-iron
n. எறிசுழல்வேல், புடையசைவு முனையினையுடைய எறியீட்டி வகை.
Toggle-joint
n. செங்கோணியக்கிப் பொருத்து.
Togs
n. pl. ஆடைகள், (வினை) ஆடைகள் அணி.
Toil
n. உழத்தல், கடுந்தொழில், கடுமுயற்சி, (வினை) உழல், கடுந்தொழில் புரி, விடாது தொழிலாற்று.
Toiler
n. கடும் உழைப்பாளர்.
Toilet
n. மேனி ஒப்பனை, சிங்காரிப்பு, ஒப்பனைப்பொருள், உடைச் சிங்காரிப்புமுறை, சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை, ஒப்பனை மேசை, நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை, கழி நீர் வாய்ப்பிடம், (மரு) அறுவையினை அலம்புகூறு.
Toilet
கழிப்பறை க்ஷீ ஒப்பனை அறை
Toilet-cloth, toilet-cover
n. ஒப்பனைமேசை மேலுறை.
Toileted
n. ஒப்பனை முற்றுவிக்கப்பட்ட.