English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Temporize
v. காலத்திற்கேற்ப நடப்பவர், காலந் தாழத்துபவர்.
Temporizing
n. தட்டிக்கழித்தல், வெற்றுச்சமரசம், (பெயரடை) தட்டிக்கழிக்கிற, விட்டுக்கொடுத்துச் சமரசஞ்செய்கிற.
Temporizingly
adv. தட்டிக்கழிப்பாக, சமரச விட்டுக் கொடுப்புடன்.
Temporofacial
a. கன்னப் பொட்டுப் பகுதியும் முகமுஞ் சார்ந்த.
Tempt
v. மஸ்க்கி வசப்படுத்தி, ஆசையூட்டி ஏய், (விவி) சோதனை செய்துபார், உறுதி தேர்ந்துபார், உறுதி தேந்துபார், (விவி) எதிர்த்துச் சினமூட்டு.
Temptability
n. கவரத்தக்க தன்மை, மருட்சியூட்டத்தக்க நிலை, சோதனைக்கு ஆளாகத்தக்க தன்மை.
Temptable
a. மயக்கி வசப்படுத்தக்க, மருடசியூட்டத்தக்க.
Temptation
n. மருட்சி, மருட்சிக்குரிய செய்தி, கவர்ச்சியூட்டுதல், கவர்ச்சி கவர்ச்சிப்பொருள், கவர்ச்சிக்கூறு, அணுப்பு, ஆசைகாட்டி ஏய்ப்பு, ஆர்வச் சோதனை, தீய கவர்ச்சி.
Tempter
n. மயக்கி ஈர்ப்பவர், கவர்ச்சியூட்டுபவர், தீய தூண்டுதல் வழங்குபவர், தீமைக்குத் தூண்டுவது, கருத்தைக் கவருபவர், கருத்தைக் கவரும் பொருள்.
Tempting
n. மருட்சிப்படுத்துதல், சோதனைக்கு உட்படுத்துதல், கவர்ச்சியூட்டுதல், ஆசைகாட்டி ஏய்த்தல், (பெயரடை) கவர்ச்சியூட்டுகிற, மருட்சியூட்டுகிற, அனுப்புகிற, ஆசைகாட்டி ஏய்க்கிற, கடுஞ்சோதனை செய்கிற.
Temptingly
adv. ஆசைகாட்டி ஏய்ப்பதாக.
Temptress
n. ஆசைகாட்டி ஏய்ப்பவள், கடுஞ் சோதனைக்கு ஆளாக்குபவள்.
Ten
n. பத்து, பதின்மர், பத்துப் பொருள், பத்துடைய அளவுப்பொருள், பத்தென்னுஞ் சீட்டு, பத்துக் கெலிப்பெண், பகல் பத்துமணி, இரவு பத்துமணிர, பல எவ்வளவோ பல (வர) பத்துப்பொன் வரிமதிப்புடைய வாக்காளர்.
Tenable
a. நிலைக்கக்கூடிய, பண வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்ககூடிய.
Tenace
n. குறட்டுப்பிடிப்பு, சீட்டாட்டத்தில் எதிரி வீட்டு வகை உச்ச இனத்தின் மேல் கீழினம் கைவசமாக உடைமநிலை, குறட்டுப்பிடிச் சீட்டு, சீட்டாட்டத்தின் எதிரி சீட்டு வகை உச்ச இனத்தின் மேல்கீழினமாகக் கைவசமுள்ள சீட்டினை.
Tenacious
a. விடாப்பிடியான, குரங்குப்பிடியான, சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற, உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற, கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற, நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள, ஒட்டிக்கொண்டுள்ள, ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற, பசைப்பற்றுள்ள, விடாது இணைந்துள்ள, எளிதிற் பிரிவுபடாத, மிகு கெட்டியான.
Tenacity
n. விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
Tenaculum
n. அறுவை மருத்துவர் பற்றுகொக்கி.
Tenail, tenaille
ஞாயில் இடைவரி, அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை.
Tenantable
a. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க.