English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Manna-croup
n. சொரசொரப்பான சிறுமணிக்கோதுமை மாவுணவு.
Manner, n.,
பாங்கு பாணி, முறை,செயல்வகை, வழிவகை, நடைப்பாங்கு, எழுகுத்து நடைப்பாணி, கலைப்பாணி, எண்ணப்படிவம், வழக்கமரபு, வகை, மாதிரி.
Mannered
a. நடத்தைவாய்ந்த, நல்லொழுக்கங்கொண்ட, பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த.
Mannerism
n. செயற்கை மரபு, போலிநடை, கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு, மட்டுமீறிய ஒருதிறச் சார்பு, எழுத்தாண்மை-பேச்சு, வகையில்போலி மரபுத்துணுக்கு நடை, செயற்கை நடை.
Mannish,
பெண் வகையில் ஆண்மாரியான, ஆணியல்பு காட்டுகிற.
Mannite, mannite-sugar
n. குடலிளக்க இன்சாற்றுப் பொருள், இன்னுணவுப் பொருள்.
Mannquin
n. ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படும் பெண், ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுபவர்.
Man-of-war
n. போர்க்கப்பல், நாட்டின் கடற்படையைச் சேர்ந்த போர்த்தளவாடக் கப்பல்.
Manor
n. இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு, முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம், பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம், அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி.
Manpower
n. ஆள்வலம், பணித்துறைக்குத் தேவைப்படும் ஆள் எண்ணிக்கை அளவு.
Manque
a. இருந்திருக்கக்கூடிய ஆனால் இலர்லாமற் போன.
Mansard, mansard roof
n. மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச்சாய்வு செங்குத்தாயுள்ள இருசரிவு மோடு.
Manse
n. சமயத்துறையினர் உறைவிடம், ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில் குருவின் வீடு.
Manservant
n. வேலைக்காரன், ஆண்பாற் பணியாள்.
Mansion
n. மாளிகை, பெரிய வீடு.
Mansion-house
n. பண்ணைமனை, பண்ணை நில உரிமையாளரின் இல்லம், நிலக்கிழாரின் இல்லம், நிலக்கிழாரின் வீடு, பணிமுதல்வர் மனை.
Mansions
n. pl. குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிடம்.
Manslaughter
n. மனிதக்கொலை செய்தல், (சட்) பகைமை வம எண்ணமற்ற ஆட்கொலை.
Mansuetude, n.,
மெல்லிணக்கப் பண்பு, பணிவுடைமை,.