English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Folk-tale
						n. மக்கள் மரபுக் கதை, பழங்கதை.
						
					 
						Follicle
						n. அடிப்புறமாக மட்டும் பிளக்கும் ஒரு தோட்டுக்காய், மயிர் மூட்டுப்பை, சிறு பை, புழுக்கூடு.
						
					 
						Follow
						n. பின்தொடர்வுப் பந்தடி, உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு, (வினை) பின்செல், பின்தொடர், பின் வரவாகு, வழியூடாகச் செல், நேர்வரிசை தழுவிச்செல், பின்னால் நிகழ்வுறு, வரிசைமுறையில் நிகழ்வுறு, மரபில் தொடர்வுறு, பின்மரபினனாகு, பணியில் அடுத்து வருகை அளி, வேட்டையிற் பின்பற்று, துரத்திச் செல், உடன் துணையாகச் செல், ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல், ஊழியனால் இயங்கு, தொண்டு செய், பின்பற்றி நட, செயல் பின்பற்று, பார்த்துப் பின்பற்றிச் செய், சொற்படி நட, கீழ்ப்படி, பற்றளனாக இயங்கு, வழிகாட்டி யாகக்கொள், இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட, விதிப்படி நட, உடனொத்து வாழ், தொழிலை மேற்கொண்டு வாழ், கூர்ந்து கவனி, முழு வளர்ச்சியையும் கண்டுணர், பொருள் புரிந்து கொள், காரண காரியத் தொடர்பு உணர், விளைவுறு, பயனாகு, உடனியங்கு, பிற்பட நிகழ்வுறு, தொடர்பாக நிகழ்வுறு, இயல்பான முடிபாய் அமை, வருவிக்கத்தக்க செய்தியாயமை, இயல்பான விளைவாய் அமை.
						
					 
						Follower
						n. பின்பற்றுபவர், ஓட்டத்திற் பின்தொடர்பவர், துரத்திச் செல்பவர், பின்பற்றி நடப்பவர், செயல் பார்த்துச் செய்பவர், கொள்கை பின்பற்றுபவர், சீடர், மற்றொரு பகுதியால் இயக்கப்படும் இயந்திரப் பகுதி, பணிப்பெண்ணை நாடிக் காதலிப்பவர்.
						
					 
						Following
						n. சார்பாளர்களின் தொகுதி, கட்சிக்காரர் தொகுதி, பின்பற்றறுபவர்கள் குழு, (பெ.) பின்வருகின்ற, பின்  தொடர்கிற, பின் குறிப்பிடப்பட்ட.
						
					 
						Follow-on
						n. சிறப்புத் தொடர் உரிமை, மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கத்தைவிடக் குறிப்பிட்ட அளவில் குறைந்த ஒட்ட எண்களை எடுத்ததால் வரிசைக்கு மாறாகத் தொடர்ந்து ஆட்டம் ஆடும் உரிமை.
						
					 
						Follow-through
						n. விடா அடி, குழிப்பந்தாட்டத்தில் பந்தை அடித்த அடி விடாமல்  அதனை முழு அளவும் கொண்டு செல்லுஞ் செயல்.
						
					 
						Follow-up
						n. தொடர் செயல், செயல் முற்றுவிப்பு, முன் விளம்பரச் சுற்றறிக்கையைக் குறிப்பிடும் மறு விளம்பரச் சுற்றறிக்கை.
						
					 
						Folly
						n. மடமை, அறிவற்ற நடத்தை, மடமையான செயல், மூட எண்ணம், மூடப் பழக்கம், ஏளனத்துக்குரிய செயல், பயனற்ற தென்று கருதப்படும் பெரும்பொருட் செலவில் எழுப்பப்பெற்ற அமைப்பு.
						
					 
						Foment
						v. ஒற்றடங்கொடு, வேதிடு, மருந்திடப்பட்ட இளஞ்சூடான கழுவுநீரினால் நீராட்டு, இளஞ்சூட்டை அளி, ஊக்கமளி, தூண்டு  கிளர்ச்சியூட்டு, தீமை செய்ய உடனுதவி யாயிரு.
						
					 
						Fomentation
						n. ஒற்றடம் கொடுத்தல், ஒற்றடம் கொடுப்பதற்குப் பயன்படும் மென்கம்பளம் முதலிய துணைப் பொருள்கள், வேதிடும் இடத்தில் மென்கம்பளம் முதலியன இட்டுக்கட்டுதல்.
						
					 
						Fond
						a. அன்புள்ள, நேசிக்கிற, காதல் கொண்டுள்ள,  விருப்பமான, பற்று மீதூர்ந்த, அளவு மீறிய அன்பு கொண்ட, மடமையாக எதையும் நம்புகிற, பற்றால் மடமையார்ந்த.
						
					 
						Fondant
						n. தின்பண்ட வகை, மிட்டாய் வகை.
						
					 
						Fondle
						v. கொஞ்சு, தடவிக்கொடு, அன்பாகத் தழுவு, அன்புகாட்டு, காதல் நடவடிக்கையில் ஈடுபடு, காதல் விளையாட்டில் ஈடுபடு.
						
					 
						Fons et origo
						n. (ல.) மூலமுதல், தோற்றுவாய், பிறப்பிடம்.
						
					 
						Font style
						எழுத்துருவடிவு
						
					 
						Fontal
						a. தீக்கைக்குரிய நீர்வைக்கும் கலம், விளக்கின் எண்ணெய்ச சேமகலம்.
						
					 
						Fontanel, fontanelle
						n. குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம்.