English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ceratoid
a. கொம்புள்ள, கொம்புபோன்ற, கொம்பு வடிவான.
Cerberian
a. நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற.
Cerberus
n. கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.
Cercarian
a. அட்டை வகைகளின் முட்டைப்புழு நிலைக்குரிய.
Cercus
n. வால்போன்ற பின்னிணைப்பு.
Cere
n. சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு, (வி.) மெழுகு பூசு.
Cereal
n. முதிரை, தானியம், கூலம், காலைச் சிற்றுண்டிப் பணியாரம், (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Cerealist
n. கூலத்துறையில் தனி ஆய்வு நடத்துபவர், முதிரைகளை உட்கொள்பவர்.
Cerebellar, cerebellous
a. சிறுமூளைக்குரிய, சிறு மூளை பற்றிய.
Cerebellum
n. (ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
Cereberal
a. மூளைக்குரிய, பெருமூளைப்பகுதி சார்ந்த, (ஒலி.) நுனிநா அண்ணத்தைத் தொடுவதனால் எழும் மெய்யெழுத்து ஒலிகளுக்குரிய.
Cerebralism
n. மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு.
Cerebration
n. மூளை இயக்கம், மூளை செயற்படுதல், மனத்தின் தொழிற்பாடு, எண்ணம்.
Cerebritis
n. மூளை அழற்சி.
Cerebro-spinal
a. மூளைக்கும் முதுகந்தண்டு வடத்துக்கும் ஒருங்கே தொடர்புடைய.
Cerebrum
n. (ல.) தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை.
Cerecloth
n. தண்ணீர் புகவிடாமல் பண்டங்களைச் சுற்றுவதற்காகப் பயன்படும் மெழுகு பூசிய துணி, பிண மூடாக்கு, கல்லறை மூடாக்கு.
Ceremonial
n. சடங்கு முறைமை, புற ஆசாரம், மரபு தழுவு வினை, சிறப்புக்கால நடைமுறை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி, (பெ.) வினைமுறைகளுடன் கூடிய, சடங்குகளுக்குரிய, புற ஆசாரம் பற்றிய.
Ceremonialism
n. புற ஆசாரங்களைக் கடைபிடித்தல், வினைமுறை வலியுறுத்தும் பண்பு.