English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cutaneous
a. தோலைச் சார்ந்த, மெய்த்தோலைச் சார்ந்த.
Cut-away
n. முன்புறத்தில் வளைவாக வெட்டப்பட்ட மேல் சட்டை.
Cutback
n. நாடகத்தில் முன்நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிச் செல்லல்.
Cutcha
n. பக்குவமுறாத, செயல் முதிராத, செங்கல் வகையில் உலர்ந்த களிமண்ணாலான.
Cutcherry, cutchery
குற்றநடுவரின் முறைமன்றம், கொலுவிருக்கை, பொதுநிலம், பண்ணை முதல்வர் மன்றம்.
Cute
a. கூரறிவுடைய, அறிவுத் திறமிக்க, கவர்ச்சி வாய்ந்த.
Cut-glass
n. சக்கிமுக்கிக் கல்லை அரைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடிக்கலம்.
Cuticle
n. தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.
Cutie
n. சுறுசுறுப்பான இளம் பெண்.
Cutis
n. தோலின் மேலீடான பகுதி கடந்த அகத்தோல், மெய்த்தோல்.
Cutlass
n. கடலோடிகள் பயன்படுத்தும் அகல் அலகுடைய வளைந்த குறுவாள்.
Cut-leaved
a. ஆழ்பிளவுற்ற இலைகளையுடைய.
Cutler
n. கத்தி முதலிய இருப்புக் கலன்கள் செய்பவர், இருப்புக் கருவி விற்பனையாளர்.
Cutlery
n. வெட்டுக் கருவிகளின் தொகுதி, இருப்புக்கருவித் தொழில், இருப்புக் கருவி வாணிகம்.
Cutlet
n. ஆட்டு விலா இறைச்சிக் கறி, கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி, விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி.
Cut-off
n. வெட்டிக் குறுக்குவது, பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி, ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய், குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு, நீர்-நீராவி-ஔத-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு, சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Cutpurse
n. திருடன், முடிச்சுமாறி, அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன்.
Cutter
n. வெட்டுபவர், வெட்டுவது, வெட்டுக்கருவி, துணிஅளந்து வெட்டும் தையற்காரர், போர்க்கப்பலைச் சேர்ந்த படகு, ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை, ஆழ நீள்கலம், வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை, முன்வாய் வெட்டுப்பல்.
Cutthroat
n. கொலைக்காரன், போக்கிரி, முரடன், கொடியவன், சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி, (பெ.) கொலைகாரத்தனமான, பாழ்படுத்துகிற.
Cutting
பிரித்தல், வெட்டுதல், கூர்ங்கருவியால் செதுக்குதல், செதுக்கிய துண்டு, வெட்டுவாய், பிளவு, பத்திரிகைத் துண்டு, பதியம், வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை, சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு.