English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cross-bones
n. pl. சாவு அல்லது கடற்கொள்ளை குறித்த சின்னத்தில் தலையோட்டுடன் இடம்பெறும் ஒன்றற்கொன்று குறுக்காகக் கிடக்கிற இரண்டு துடையெலும்புகள் வடிவம்.
Cross-bow
n. குறுக்குவில், கணை அல்லது கல் எறிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலப் பொறி.
Cross-bower, cross-bowman
n. குறுக்குவில் ஏந்திய வீரர்.
Cross-breed
n. கலப்பினம், இனக்கலப்பினால் தோன்றிய கான்முளை.
Cross-bun
n. கிறித்தவர் விழாநாளாகிய புதுவௌளிக் கிழமையன்று உட்கொள்ளப்படும் சிலுவைக்குறியுடைய வட்டப் பொங்கப்பம்.
Cross-buttock
n. மற்போர்வீரர் இடுப்புப் பிடிவகை.
Cross-correspondence
n. உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை.
Cross-counter
n. குத்துச்சண்டையில் எதிரியின் முதல் தாக்குதலைத் தடுக்க எதிரியின் இடதுகைப்புறமாக வலக்கையும் வலதுபுறமாக இடக்கையும் எதிரெதிர் குறுக்கிடும்படித் தாக்கும் எதிர்த்தாக்கு முறை.
Cross-country
a. பாட்டையிலிருந்து விலகி வயல்களின் ஊடாகச் செல்கிற, (வினையடை) பாட்டையிலிருந்து விலகி வயல்களினுடாக.
Cross-crosslet
n. நான்கு முனைகளிலும் நான்கு உட்சிலுவைகள் கொண்டுள்ள சிலுவை.
Cross-cut
n. குறுக்குவெட்டு, குறுக்கு வழி, (பெ.) குறுக்கு வெட்டுக்காகச் செய்யப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்படுகிற.
Cross-cut
v. குறுக்காக வெட்டு.
Crosscut-saw
n. உத்தரங்களைக் குறுக்காக வெட்டுவதற்கான பெரிய இரம்பம்.
Cross-division
n. ஒன்றன்மீது ஒன்று கவிந்து மேற் செல்கிற பிரிவுகளாகப் பிரித்தல்.
Crosse
n. கனேடியப் பந்து விளையாட்டு வகையில் பந்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வலையுடைய வளைதடி.
Crossed
a. குறுக்காக வைக்கப்பட்டுள்ள, சிலுவைக்குறி போட்டுள்ள, குறுக்கிட்டுக் கெடுக்கப்பட்ட.
Cross-examination
n. (சட்.) குறுக்கு விசாரணை, குறுக்குக் கேள்வி.
Cross-examine
v. (சட்.) குறுக்கு விசாரணைசெய், குறுக்குக் கேள்வி கேள், மறை செய்திகளை வௌதப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள், எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு.
Cross-eyed
a. ஓரக்கண் பார்வையுள்ள.
Cross-fertilization
n. (தாவ.) அயல்கருவுறுதல், மாற்றுக் கருவுயிர்ப்பு.