English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corozo-nut
n. தாவர தந்தம் தரும் தென் அமெரிக்கப் பனை இன மரவகையின் கொட்டை.
Corporal
-1 n. படைத்துறைச் சிற்றலுவலர், கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர், சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
Corporal
-2 n. கிறித்தவத் திருவிருந்தின் போது அப்பத்தையும் தேறலையும் வைப்பதற்குப் பயன்படும் துணி.
Corporal
-3 a. மனித உடம்புக்கடுத்த, உடலுக்குரிய, உடம்பினை உடைய, தனிமனிதருக்குரிய, சடமான, சித்து அல்லாத, ஆன்மா சாராத.
Corporalities
n. pl. உடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள்.
Corporality
n. உடல்வாழ்வு, உடம்பு.
Corporate
a. சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட, ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற, உறுப்பினர் நிறைகூட்டான, கூட்டுரிமையுடைய, நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய, கூட்டான, கூட்டுக் குழுவுக்குரிய, கூட்டாண்மைக்குரிய.
Corporation
n. மாநகராண்மைக் கழகம், கூட்டுரிமைக் குழு, அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு, அரசியல் தனியுரிமை பெற்றவர்.
Corporation
கூட்டிணையம், நிறுவகம், நிறுவனம், கூட்டகம், கூட்டு நிறுவனம்
Corporative
a. சட்டப்படி உண்டாக்கப்பட்ட இணைக்கழகம் சார்ந்த.
Corporator
n. கூட்டுரிமைக்குழு உறுப்பினர்.
Corporeal
a. உடல்சார்ந்த, உடம்பினையுடைய, சடப்பொருளான, (சட்.) உருப்படியான.
Corporealism
n. உலோகாயதம்.
Corporeity
n. பரு உடம்பியல்பு, பரு உடல் பெற்றிருத்தல், பரு உடலின் பொருண்மை.
Corporification
n. உருவாக்கம், திட்பமுறுவித்தல்.
Corporify
v. பிழம்புருவாக்கு, உருவங்கொடு.
Corposant
n. புயலடிக்கும்போது சில சமயம் கப்பலின் மேல் காணப்படும் ஔத உருண்டை.
Corps
n. படைப்பிரிவு, படைத்துறைப்பணி வகுப்பு, படை அரங்க வகுப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குழு, செர்மன் மாணவர் கழகம், தொழில் துறை அமைப்புக் குழு.
Corpse
n. உயிரற்ற மனித உடல், பிணம்.
Corpse-candle
n. சாவின் முன்னறிவிப்பாக இடுகாட்டிற் காணப்படும் தீக்கொழுந்து.